உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கலைஞர் என்ன, பம்பரமெனப் பணியாற்றும் யாகூப், முத்து கிருஷ்ணன் என்ன, இவர்கள் எல்லாம் இன்றைக்கு இல்லை; எனினும் இவர் போன்றோர் இட்ட வித்தன்றோ இன்று திருவாரூரில் இயக்கத்தின் இலட்சியத் தருவாக எழுந்து நிற்கிறது! இங்ஙனம் தமிழ்நாடெங்கும் ஒவ்வொரு ஊரிலும் நகரிலும் தங்கள் உடலை மெழுகுவர்த்தியாக்கிக் கொண்டு உழைத்திட்ட தியாகச் செம்மல்களின் அரிய தொண்டின் அடையாளம் தான் இந்தக் கழகம். இதற்கோர் இன்னல் வந்திடுமெனில் தோள் கொடுக்க நாங்கள் இருக்கிறோம் என அறிவிக்கும் அடையாளச் சின்னங்களைத்தான் சின்னங்களைத் தான் அனுதினமும் சந்திக் கிறேன். தங்கம நிகர் உடன்பிறப்பே! தஞ்சையை மட்டும் தனித்துப் பாராட்டியதாக எடுத்துக் கொள்ளாதே! இந்த எளியவனின் பொது வாழ்வுப் பின்னணிக்கு எல்லா மாவட்டங்களிலுமே வரலாற்று வரிகள் உண்டு! எனக்கொரு வரலாறா? போயும் போயும் இந்தப் போக்கற்றவனுக்கு ஒரு வரலாறா? எனச் சிலர் கேட்பர்! எழுதுவர்! ஏளனம் புரிவர்! அதுபற்றி நான் கவலை கொள்ளாமல், நீ இருக்கிறாய் - உன் நெஞ்சில் கழகம் இருக்கிறது என்ற தெம்புடன் எனது ஓயாப் பணிகளை ஆற்றிக் கொண்டேயிருப்பேன். "ஓயாது உழைத்த ஒரு தொண்டன் இங்கே ஓய்வெடுத்துக் கொள்கிறான்" என்று நான் ஓய்வு கொள்ளும் இடத்தைப் பார்த்து நீ ஒரு பெருமூச்சு விடு வாயானால்; அதுவே என்மீது வீசும் மெல்லிய பூங்காற்றாக இருக்கும். அன்புள்ள, மு.க. 10-8-76