உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 145 நமது நாட்டில் கருத்துமாறுபாடுகள் கொண்ட அனைத்திந்திய கட்சிகள் இருக்கின்றன, மாநிலக் கட்சிகள் இருக்கின்றன. சுதந்திர நாளையோ, குடியரசு தினத் தையோ கொண்டாடும்போது அதனை எல்லாக் கட்சிகளை யும் கட ந்த மக்களின் விழாவாக ஆக்கிடவேண்டும். அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்றபோது இப்படி ஒரு கருத்தை வெளி யிட்டு இந்த விழாவைப் பொது விழாவாக ஆக்கிட முனைந்தார். சில முக்கிய கட்சிகள் ஒத்துவராத காரணத். தால் தோழமைக் கட்சிகள் சார்பில் விடுதலைநாள் விழாப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் அண்ணா அவர்களும் தோழமைக் கட்சித் தலைவர்களும். உரையாற்றினார்கள். அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, முதல்வர் பொறுப்பு என் தோள் மீது விழுந்தபோது, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் முகப்புக் கொத்தளத் திலேயே ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ஆம் நாள் அனைத்துக் கட்சித் தலைவர்களும் விடுதலை விழாவில் பங்கேற்று உரையாற்றும் ஏற்பாடுகள் செய்யப்பெற்றன. அப்படியிருந்தும் அந்த நாளில் வேறு இடங்களில் தனித் தனிக் கட்சிகளின் கூட்டங்கள் நடைபெறுவதைத் தவிர்த்திட இயலவில்லை. சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுகிற பல்வேறு நாடுகளில் அந்த விழா, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொதுவிழாவாகத்தான் நடைபெறுகிறது. ய இந்திய நாட்டின் பல்வேறு கட்சித் தலைவர்களும், இந்தியப் பேரரசும் முயன்றால் இங்கேயும் இந்த விடுதலை நாள் விழாவை ஒரு நாள் தங்கள் தங்கள் கட்சிகளை மறந்து பொதுமக்கள் விழாவாகக் கொண்டாடக் செய்திட முடியும். 910