உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கலைஞர் விடுதலை விழா குறித்து அண்ணா அவர்கள் கூறிய அருங்கருத்தொன்றை மறந்திடலாகாது. "முதல் ஆண்டு கொண்டாடிய ஆகஸ்டு பதினைந்து, கணக்குத் தீர்த்த நாள்! அடுத்தடுத்த ஆண்டுகளில் கொண்டாடும் ஆகஸ்டு பதினைந்து கணக்குப் பார்க்கும் நாள்!" ஆம்; 1947 ஆகஸ்டு 15 அன்னிய ஆதிக்கத்தின் கணக்கைத் தீர்த்தநாள்! பிறகு ஒவ்வொரு ஆண்டும், -சுதந்திர இந்தியாவின் சாதனைகளின் கணக்கைப் பார்க்கும் நாள் தானே! இந்தநாளில் நாம் நடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்த்து இனி நடக்கவேண்டிய பாதையைக் குறித்து பெருமூச்சு வைப்போம்! விடாமல் உறுதியுடன் அடியெடுத்து - பல மொழி பேசும் பல்வேறு கலாச்சாரங்களை தேசீய இனங்களைக் கொண்ட இந்தப் பெருநாட்டின் 'வேற்றுமையிலும் ஒற்றுமை" என்ற கொள்கை வெற்றி பெற நமது இலட்சியப் பயணத்தைத் தொடருவோம்! ‘பொதுமக்களின் கருத்துத்தான் ஒரு சமுதாயத்தைத் தூய்மையானதாக உருவாக்க முடியும். ஒரு சிலரின் கருத்துக்களை மட்டும் ஏற்றுக்கொள்வதென்பது உண்மை யான சுதந்திரமாகாது" எனக் கூறிய காந்தியடிகளின் 'பொன்மொழியை இதயத்தில் பதியவைத்துக்கொண்டு பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்திடக் கையில் சுடர் விளக்கு ஏந்தி நடந்திடுவோம்! ஓர்புறமிருந்து உறுமுகிறது பகையெனக் கேள்விப் பட்ட மாத்திரத்தில் அனைவரும் ஓரணியில் நின்று;