உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்ல வேண்டியதைச் சொல்லி வைத்தேன்! உடன்பிறப்பே, 'கிள்ளை' என்பது எவ்வளவு அழகு மிகுந்த தமிழ்ப் பெயர். அந்தப் பெயரைச் சூட்டிக் கொண்டிருக்கும் சிற்றூர் தில்லைக்கு அருகாமையில் ஒன்பது கல் தொலைவில் இருக்கிறது. அங்கே ஒரே மேடையில் திருமணங்கள். ஒன்பது ஒன்பதாண்டு காலம், கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததை விளக்குவதற்காக இந்த ஏற்பாடா? என்று கூட நான் அந்தத் திருமண விழாவிலே வேடிக்கையாகக் கேட்டேன். தில்லை திருவேட்களத்தில் மணவிழா நிகழ்ச்சியினை நிறைவேற்றி வைத்துவிட்டுக் கிள்ளை செல்லும் வழியில் உன்போன்ற உடன்பிறப்புக்கள் காட்டிய உற்சாகத்தை யும், வழங்கிய ஊக்கத்தையும் என்னவென்று கூறுவேன்! நான் அழகிய அந்தக் கிள்ளைக்கு மிக அருகிலேதான் பிச்சாவரம் இருக்கிறது. நமது அண்ணனுக்கு மிக விருப்பமான இடம். அங்குள்ள அடர்ந்த காட்டினைக் காண்பதிலும், படகுப் பயணம் செய்வதிலும் தனது சோர்வையெல்லாம் மறந்து விடுவார் அவர்! இப்போதும் என்னை அந்தப் பகுதிக்கு அழைத்தார்- கள் சில மணித்துளிகள் ஓய்வெடுக்கலாம் என்று! கிள்ளை