உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதையும் கருத்தும் ! உடன்பிறப்பே, ஒரு கதை சொல்லுகிறேன்; கேட்கிறாயா? கேட்கிறாயா? ஊர்க் கோடியில் உள்ள பிள்ளையார் கோயில் மண்டபத்தில் நின்றுகொண்டு ஒருவன் முழங்கினான். 'என் எதிரி ஒழிந்துவிட்டான். அவனை நான் ஒழித்துவிட்டேன். செத்தான்! செத்தான்! செத்தே போய்விட்டான்! ஜெயித்துவிட்டேன் நான்! ஜெயபேரிகை கொட்டுகிறேன் ஒழிந்தான் என் பகைவன் நான் 99 அவனது ஆவேச முழக்கத்தைக் கேட்க ஊர் மக்கள் ரண்டார்கள். அடடா! அசகாய சூரன் இவன்! எனப் பாராட்டினார்கள். மறுநாள் காலை, அதே ஊரில் உள்ள ஒரு குன்றின் பக்கமிருந்து ஒலி கேட்டது. ஊரார் அந்தக் குன்றினருகே குழுமினர். . அதே பிள்ளையார் கோயில் மண்டபத்தில் பேசிய ஆள்தான் குன்றின் மீது நின்று கொக்கரித்துக் கொண் டிருந்தான். 6 6 வீழ்ந்தான் என் விரோதி! செய்தி தெரியுமா உங்களுக்கு? என் பகைவனைத் தீர்த்துக்கட்டி விட்டேன். முடிந்தது அவன் கதை! முழுவெற்றி எனக்கு! அதனால்தான் முழங்குகிறேன் வெற்றி முரசு!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/31&oldid=1695439" இலிருந்து மீள்விக்கப்பட்டது