உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கலைஞர் கூடியிருந்த மக்கள் ஒருவரையொருவர் பார்த்துக் ஒவ்வொருவராகக் கலைந்து கொண்டனர். சென்றனர். பிறகு அதே நாள் இரவு அந்த ஊர்ப் பொது மண்டபத்தில் விளக்குகள் வரிசை வரிசையாக ஏற்றி வைக்கப்பட்டிருந் தன. கோயிலிலும், குன்றிலும் ஏறி நின்று கூவியவன், இப்போது பொது மண்டபத்தில் நின்றுகொண்டு குர லெழுப்பினான். 6 "என் ஆற்றலைக் கண்டீரோ அவையோரே! அரை நொடியில் அழித்துப்போட்டுவிட்டேன் ஆணவங் கொண்ட பகைவனை! அவன் புதையுண்ட இடத்தில் இனிப் புல் கூட முளைக்காது! வீசினேன் வாளை! வீழ்த்தினேன் தலையை! வீணன் கல்லறையாகிவிட்டான். அட்டாவோ! என் அற்புத வீரத்தைக் காண்மின்! காண்மின்! ஒழிந்தான் . என் எதிரி! முடிந்தது அவன் வரலாறு! பொதுமண்டபத்தில் ஓய்வுக்காக வந்து உட்கார்ந்திருந்த சிலரும் ஒருவரையொருவர் அந்த விளக்கொளியிலே நோக்கியவாறு மெல்லச் சிரித்துக் கொண்டே பத்தைவிட்டு அகன்றனர். மண்ட மறுநாள் நடுப்பகலில் அந்த ஊர்ச் சந்தை கூடு மிடத்தில் அதே கோயிலடி வீரன் வந்து நின் று கொண்டான். 6 6 ஊராரே! உத்தமரே! அறிவீரோ செய்தி? ஒருவனிருந்தானே என் எதிரி! அவன் செத்த பாம்பாகி விட்டான்! கொடுக்கறுந்து, குடலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/32&oldid=1695440" இலிருந்து மீள்விக்கப்பட்டது