உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் அறுந்து, குழியில் போடப்பட்ட தேளாகி விட்டான். சாய்ந்தான் என் பகைவன். சாய்ந்தான்! சாய்ந்தான்! அதனால்தான் நான் சந்தோஷப் பள்ளுப் பாடுகிறேன். இனி அவனை நீங்கள் காணமுடியாது.' ,, 19 சந்தைக்கு வந்தோர் அவனைக் கவனிக்காமலேயே தங்கள் தங்கள் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந் தனர். அவனும் அந்த இடத்தை விட்டுப் போகாமலே இருட்டும் வரையில் கத்திக் கொண்டிருந்தான். . அதற்கு அடுத்த நாள் அந்த ஊர்த் திருவிழாவினை யொட்டி தெருக்கூத்து நடைபெற இருந்தது. ஊர் மக்கள் கூத்து மேடைக்கெதிரே கூடியிருந்தனர்.. கோயி லில் முழங்கி, குன்றேறி கர்ச்சித்து, மண்ட பத்தில் மார்தட்டி, சந்தையிலும் சங்கநாதம் செய்த அந்த வீராதி வீரன், கூத்து ஆரம்பிப்பதற்கு முன்பாக, தன் உடைவாளை உருவிக்கொண்டு கூத்து மேடையில் குதித் தோடி நின்றுகொண்டு கூச்சலிடத் தொடங்கினான். 6 6 தொலைந்தான் என் எதிரி! தொல்லை ஒழிந்தது - வீழ்ந்தான் பகைவன்! அழித்துவிட்டேன். அணு அணுவாகச் சித்திரவதை செய்து அழித்துவிட்டேன்!" கூட்டத்திலிருந்து பத்து பேர் எழுந்தார்கள். தெருக் கூத்து மேடைக்குச் சென்றார்கள். கொண்டார்கள். 6 % அவனைச் சூழ்ந்து ஏனப்பா! தினந்தோறும் காலை மாலை உனக்கு இதே வேலையா? கோயிலுக்குப் போனால் அங்கே வந்து கத்துகிறாய்? குன்றின் மீது ஏறிக் கொண்டு எங்கள் காதைக் குடைகிறாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/33&oldid=1695441" இலிருந்து மீள்விக்கப்பட்டது