உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கலைஞர் காங்கிரஸ் சார்பாக ய நடந்த விழாவுக்கு சென்னை சவான் அவர்களும், நகருக்கு வந்த மத்திய அமைச்சர் பழைய காங்கிரசின் சார்பாக நடந்த விழாவுக்கு சென்னை நகருக்கு வந்த அசோக் மேத்தா அவர்களும் காமராஜரின் தொண்டுள்ளம், தியாகம், உழைப்பு, உறுதிப்பாடு, ஜன நாயக நெறி, ஆகியவை குறித்து விரிவுரைகளை நிகழ்த்தித் தங்கள் அரசியல் பண்பாட்டினை உணர்த்தியிருக்கின்ற னர். மறைந்த தலைவர் ஒருவரின் புகழ்பாடும் நேரத்தில், அதுவும் பிறந்தநாள் கொண்டாடும் நேரத்தில் அவரைப் பற்றிய சிறப்பியல்புகள், அவரது வாழ்க்கையில் மற்ற வர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இவை களைப்பற்றி பேசுவதுதான் சிறப்பு! அந்த அடிப்படையை உணர்ந்து உரையாற்றிய சவான் அவர்களும், அசோக் மேத்தா அவர்களும் வேறு வேறு மேடைகளில் நின்று பேசினார்கள் என்றாலும், தங்கள் ஆழ்ந்த அனுபவத்திற் கும், தாங்கள் கடைப்பிடிக்கும் பண்புக்கும் ஏற்ற சொற் களை அமைத்து உணர்ச்சிமயமான பேருரைகளை நிகழ்த்தி யிருக்கிறார்கள். அவர்களிருவரையன்னியில் மற்றும் பலரும் இரு மேடைகளிலும் பேசியிருக்கிறார்கள், அப்படிப் பேசிய வர்களில் ஒரு சிலரால் தி. மு. கழகத்தைத் இருக்க முடியவில்லை தொடாமல் 6 "காமராஜர் தி.மு.க. F அ.தி.மு.க இரண்டை 9 யுமே ஒழிக்க வேண்டுமென்று சொன்னார்.'" து ஒரு மேடையில்! காமராஜர் தி. மு. க. வை ஒழிக்கவேண்டுமென்று சொன்னார். ஆனால் ப. ராமச்சந்திரன், தி.மு.க.வுடன் உறவாடுகிறார் ரகசியமாக!" இது மற்றொரு மேடையில்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/38&oldid=1695446" இலிருந்து மீள்விக்கப்பட்டது