உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 25 8 "தி. மு. க. வுடன் எங்களுக்கு ஒட்டோ உறவோ இல்லை. இது ஒரு மேடையில் "தி.மு.க.வுக்கு நேரே வருவதற்குத் தைரியமில்லை. சட்டைக்குள் ஒளிந்து கொண்டு ய. ராமச்சந்திரனின் கொட்டமடிக்கிறது. கருணாநிதியின் தைரியத்தால்தான் ராமச்சந்திரன் இன்று கட்சி நடத்துகிறார். இதை தேசீயவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்." இது மற்றொரு மேடையில்! உடன்பிறப்பே, இந்தப் பேச்சுக்கள் அனைத்தும் முக்கியமான பத்திரிகைகளில் வந்தவைகள் தான்! காமராஜர் ஒரு தேசியத் தலைவர். அவர் ஒரு கட்சி யின் தலைவராக விளங்கிய போதிலும் அவர் மறைவுக்குப் பிறகு அனைத்துக் கட்சியினரும் ஏற்றிப் போற்றுகின்ற ஒரு உன்னதமான இடத்தில் தேசத்தலைவர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அவருடைய பிறந்தநாள் விழா! அதிலும் அவருடைய மறைவுக்குப் பிறகு நடைபெறுகிற முதல் பிறந்த நாள் விழா! அந்த விழாவிலே காழ்ப்புணர்ச்சிகளையும், மற்றக் வார்த்தைகளையும் வார்த்தைகளையும் கொட்டுகிற கட்சிகளைத் தாக்குகிற போக்கு அவ்வளவு நல்லதல்ல! க-8-3 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/39&oldid=1695447" இலிருந்து மீள்விக்கப்பட்டது