உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கலைஞர் தையும், தொண்டி என்னும் பேரூரில் விளைந்த வெள்ளிய நெல்லரிசி அனைத்தையும் உலையிலிட்டு ஆக்கிய சோறுடன் கலந்து, ஏழு உண் கலங்களில் வைத்து நாள்தோறும் வழங்கினாலும் அந்தக் காக்கைக்கு நன்றிக்கடனாக நீ தர வேண்டிய காணிக்கைக்கு அது குறைவானதேயாகும். ஏனெனில் மெல்லிய தோள்கள் இளைத்துப் போகுமள வுக்குப் பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்கு அந்தக். காக்கைதான் ஆறுதல் அளித்திருக்கிறது. 99 உடன்பிறப்பே, இந்தச் செய்யுள் வாயிலாக காதலர் களின் பிரிவாற்றாமை மட்டுமல்ல, பழந்தமிழர் காலத்துப் பழக்கவழக்கங்களும் எடுத்துக் காட்டப்படுகின்றன. அது மட்டுமல்ல, காக்கைக்குப் போடும் சோறு கூட பசு நெய் கலந்திருக்கும் அளவுக்கு அந்தச் சோறும் வெள்ளிய உயர்ந்த அரிசி கொண்டு தயாரிக்கப்படுவது எனும் அள வுக்கு வளம், கொஞ்சியது என்பதும் உணர்த்தப்படு கிறது. - 6 - நீ அதற்கும் மேலாக “தலைவனே! நீ என்னைப் பாராட் டுவதைவிட அந்தக் காக்கையைத் தெய்வமாகக் கருதி, அதற்கேற்ற பலிப்பொருளாக நெய்ச் சோறு வழங்கு! அந்தச் சோறும் தொண்டியில் விளைந்த அரிசி முழுவதையும் கொண்டு ஆக்கி, முல்லை நிலத்தில் கிட்டும் நெய் முழுவதை யும் பெய்து வழங்கப்பட்டாலும், அது அந்தக் காக்கை செய்துள்ள தொண்டுக்கு குறைவான பரிசேயாகும்" எனக் குறிப்பிட்டுப் பிரிவாற்றாமையின் தன்மையை அழகு பட விளக்குகிறது. இதுபோன்ற பிரிவாற்றாமை பற்றிய தமிழ்க் கவிதை. களைப் படிக்கும் சுகத்திலேயே பிரிவுத் துயரம் கூட சிறிது ஒதுங்கியிருக்குமல்லவா? காக்கை வாழ்த்து என்று கூட இந்தக் கவிதைக்குத் தலைப்பு தரலாம். காக்கையை வாழ்த்துவதை விட இந் தக் கவிதையைத் தந்த காக்கை பாடினியார் நச்செள்ளை யாரை வாழ்த்துவது மிகவும் பொருத்தம். அன்புள்ள மு.க. 25-7-76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/72&oldid=1695480" இலிருந்து மீள்விக்கப்பட்டது