உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்தில் மின்வெட்டு ! உடன்பிறப்பே, தமிழ்நாட்டில் மின்சார வெட்டு நாளை முதல் நடை முறைக்கு வருமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்றியமையாத தொழில்கள் அல்லாத ஏனைய முப்பது சதவீத மின் தொழில் வணிக நிலையங்களுக்கு வெட்டு! இன்றியமையா முதன்மைத் தொழில் நிறுவனங் களுக்கு இருபத்தைந்து சதவீத மின்வெட்டு! தெரு விளக்குகளுக்கு ஐம்பது சதவீத மின் வெட்டு! அதாவது தெருவிளக்குகள் ஒன்றுவிட்டு ஒன்று மட்டுமே எரியும். வீடுகளைப் பொறுத்தவரையில் ஒரு குடும்பம், மாதத் திற்கு அதிக அளவு 250 யூனிட் வரையில் உபயோகிக் கலாம். அதற்குமேல் செலவிடும் ஒவ்வொரு யூனிட் மின் சாரத்திற்கும் சாதாரணக் கட்டணத்துடன் கூடுதலாக ஒன்றரை மடங்கு கட்டணம் அபராதமாக படும். வசூலிக்கப் விவசாயத் தேவைகளுக்கான மின் உபயோகத்திற்கு வெட்டு எதுவும் இல்லை. குறைந்த மின் அழுத்த சக்தி பயன்படுத்தப்படும் தொழில்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் முப்பது சதவீத வெட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/73&oldid=1695481" இலிருந்து மீள்விக்கப்பட்டது