உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கலைஞர் விடையும் விளக்கமும் அளித்துக் கொண்டிருப்பதென்றால் அதுவே ஒரு கட்சிக்குப் பெரிய வேலையாகிவிடும். பல லட்சம் உறுப்பினர்களைத் தன்னகத்தே கொண்டு பல்லாயிரக்கணக்கான கிளை அமைப்புக்களுடன் கட்டுக் கோப்புடன், சட்ட திட்டங்களின் வழிநின்று அண்ணா காட்டிய நெறியில் இருபத்தேழு ஆண்டுகால அரசியல் வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் கழகத்தின் வலிவை அதன் பாதையின் குறுக்கே கூட வராமல் ஓரத்தில் நின்று கொண்டு பழிப்புக் காட்டும் சில ஏடுகளுக்காகவும், சில நண்பர்களுக்காகவும் வேறு போக்கில் திருப்பி வீணாக்கிட நாங்கள் யாரும் விரும்பவில்லை. குற்றாலத்தைப்பற்றி ஏதாவது ஒரு கற்பனைப் புகாரை சொன்னால் கோயமுத்தூரில் இருப்பவர்களுக்குத் தெரி யவா போகிறது என்று கூற வேண்டியது அல்லது எழுத வேண்டியது! அவர்கள் கூறுவது உண்மையா பொய்யா என்று குற்றாலத்தில் இருக்கிறவருக்குத் தெரியாமலா போய் விடும்? பிறகு சேலத்தைப் பற்றிச் சொன்னால் சின்னாளப்பட் டிக்குத் தெரியவா போகிறது என்று சேலத்தில் ஒரு கற் பனைக் கதையை விடுவது! . எடுத்துக்காட்டாக நமது நாவலர் அண்மையில் சேலம் சென்று வந்தார். மகத்தான வரவேற்பு! மாபெரும் கூட்டம்! அவரும் மற்றவர்களும் நீண்ட நேரம் சொற் பொழிவாற்றினர். ஆர்வத்துடன் மக்கள் கருத்துக்களைக் கேட்டு விளக்கங்கள் பெற்றனர். இதுதான் நடந்தது. ஆனால் ஒரு ஏடு செய்தி வெளியிடுகிறது. சேலத்தில் நாவலர் கூட்டத்தில் பெரிய கலவரம் நடந்தது என்ப தாக! அந்த ஏட்டினை சேலத்தில் உள்ளவர்கள் படித்துப் பார்த்தால் உண்மையை உணர்ந்து கொள்வார்களா இல்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/84&oldid=1695492" இலிருந்து மீள்விக்கப்பட்டது