உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைவிடாது நடந்திடுவோம் ! உடன்பிறப்பே, செய்திகளை எப்படித் திசை திருப்பி வெளியிடலாம் என்பதிலும். எப்படி வெளியிட்டால் தி. மு. கழகத்தின் மீது மக்களுக்கு வெறுப்பையும் குழப்பத்தையும் ஏற் படுத்தலாம் என்பதிலும் காட்டுகிற அக்கறையைத்தான் சில ஏடுகள், தாங்கள் கடைப்பிடிக்கிற பத்திரிகை நெறி என்று எண்ணிக் கொண்டிருக்கின்றன. று எனக்கும் கழகப் பொருளாளருக்குமிடையே பெரிய தகராறு! இருவரும் சந்திப்பதே இல்லை! இப்படி இரண்டு மூன்று நாட்களாகச் செய்திகள்! அந்தச் செய்திகள் வந்த நாட்களில் எல்லாம் நானும், நாவலரும், பேராசிரியரும், மற்றும் நமது கழக முன்னணி யினரும் அன்பகத்திலோ, அல்லது விசாரணைக் கமிஷன் பணிபுரிவதற்காக இயங்குகிற வழக்கறிஞர்களின் அலு வலகங்களிலேயோதான் கலந்துரையாடிக் கொண்டிருந் தோம். நாலு நாட்கள் சேர்ந்தாற்போல இப்படிக் கலக மூட்டும் செய்திகள் வந்து கொண்டேயிருந்தால் உனக்கே கூட சிறிது குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது! இருக்குமோ? என்ற விதத்தில்! ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்படாதா என்றுதான் அவர்கள் அவ்வாறு செய்திகளை உருவாக்குகிறார்கள். ஒவ்வொரு நாளும் சில ஏடுகள் தருகிற கற்பனைச் செய்திகள், அல்லது கழகத்திற்குள் கலகமூட்டும் செய்திகள் - இவைகளுக்கு F

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/83&oldid=1695491" இலிருந்து மீள்விக்கப்பட்டது