உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் 99 நகரசபைத் தலைவனாக வந்துவிட்டானே' என்று அலறினர். புண்யகோடியும் கண்ணீர் விட்டார். மாதங்கள் சில உருண்டன. புதிய நகரசபைத் தலைவரின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. பொதுமக்கள் குமுறும் எரிமலைகளாகி விட்டனர். அப்போது, புண்யகோடி புதிய தலைவரைப் பற்றி ஒரு மேடையில் பேசப்போவதாக விளம்பரம் செய்தார். மக்கள் திரண்டு வந்தனர். முதலில் புண்யகோடியின் காரியதரிசி பேசினார். புதிய தலைவரைக் காரசாரமாகத் தாக்கினார். மக்கள் குதூகலித்தனர். அடுத்துப் புண்யகோடி எழுந்தார். பொதுமக்கள் ஆவல் ததும்பியபடி அவர் பேச்சை எதிர்நோக்கினர். நண்பர்களே ! நான் புண்யகோடி பேசினார். தலைவரை ஆதரிக்கிறேன் கீழே இறங்கினார். 66 புதிய என்று கூறிவிட்டு மேடையிலிருந்து பொதுமக்கள் வாயடைத்துப் போயினர். " காரியதரிசி கர்ச்சிக்கிறார்; புண்யகோடி இப்படிப்பேசுகிறார். என்ன ஆச்சரியம் !” என்று நகரமே வியந்தது. “நீ தாக்கு, நான் ஆதரிக்கிறேன் ” என்று திட்டம் போட்டிருக்கிறார்கள் என்றனர் சிலர். “புதிய தலைவருக்கும் புண்யகோடிக்கும் ஏதோ பேச்சு நடந்திருக்கிறது" என்றனர் சிலர். 66 எல்லாம் நன்மைக்குத்தான் ” என்றனர் புண்யகோடியின் பரம்பரைப் பக்தர்கள். பாவம் ; அவர்களுக்கெல்லாம் தெரியாது - புண்யகோடி, மீண்டும் அனுப்பிய பழைய விண்ணப்பத்தைப் புதியசேர்மன் கவனித்துப் பத்தாயிர ரூபாயை வீடு பழுது பார்க்கத் தந்து விட்டார் என்ற சேதியும் - புண்யகோடியிடம் பழைய நகரசபை நஷ்ட ஈடாகப் பெற்ற பத்தாயிரத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார் என்ற தகவலும். எல்லாம் எப்படியோ மறைக்கப்பட்டு விட்டன. புண்யகோடி பொதுஜனத் தொடர்போடுதான் கிறாராம் ; இதை மட்டும் அவர் காரியதரிசி சொல்கிறார். உலவு