உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. வாழமுடியா தவர்கள் 167 வான வெளியில் மேகத்தைத் தொட்டுத் தொட்டு விளையாடிய சந்திரன் பேசுவது போலிருந்ததோ என்னவோ; அவன் வைத்த விழியை எடுக்காமல் அசைவற்றிருந்தான். நிரம்பப் விட்டுப் சந்திரன் ! சின்னச்சாமியின் மனைவியின் பெயர்கூடச் சந்திரா தான். அவள் மண்ணோடு கலந்து பத்து வருடமாகிறது. சின்னச்சாமியின் முப்பதாவது வயதில் சந்திரா பத்து வயது பெறாத காந்தாவைத் தாயில்லாப் பிள்ளையாக்கி போய் விட்டாள். தகப்பனார் உயிரோடிருந்த காலத்தில் சின்னச்சாமிக்குச் சந்திராவை எப்படியோ கல்யாணம் செய்துவைத்துப் பார்த்துக் கண்ணை மூடினார். இடையே சாவு தன் கொடிய கரங்களை நீட்டிச் சந்திராவின் கழுத்தை நெறித்தது மட்டுமின்றிக் காந்தாவைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பை அந்தப் பரிதாபத்துக்குரிய போலீஸ்காரருக்குக் கொடுத்துச் சென்றது. மறு எத்தனையோ முறை முயன்று பார்த்தான். முன்னூறு ரூபாய் கூட இல்லாமல் எப்படி கல்யாணம் பண்ணுவது! கஷ்டப்படும் போது-கண்ணீர் விடும்போது-கதியில்லையே எனக் கதறும் போது கல்யாணம் செய்துகொள்ள கைகொடுக்க வராத உறவினர்கள் கல்யாணமென்றால் நாக்கைத் தட்டிக்கொண்டு வருவார்கள். பத்திரிகை தராவிட்டால் பல்லைக் கடிப்பார்கள். இந்த நிலையில் ஏழைக்குக் ஏழைக்குக் கல்யாண எழவா?...... அப்போதைய போலீஸ் சம்பள த்தைத்தான் கேட்கவேண்டிய தில்லை; அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டம். இதில் நோய் நொடிகள் ஏற்பட்டால், டாக்டர் தர்மவானாக மா றவேண்டும். காலில் முள் குத்திவிட்டால், முறிந்துவிட்டால், வண்டிக்காரன் பயந்தவனாக இருக்க வேண்டும். என்னதான் மேல் வரும்படி வந்தாலும் காப்பி, தேத்தண்ணீருக்குத்தான் சரியாக இருக்கும். கல்யாணம் செய்துகொள்கிற அளவுக்குச் சாதாரண போலீஸ் காரருக்குக் கிம்பள சான்ஸ்' கிடைக்குமா? 6 மனைவி இறந்துபோன துக்கம் மறைந்து, அடுத்த கல்யாணம் கிடையாதா என்ற கேள்வி ஏக்கமாக வளர்ந்து, சின்னச்சாமியின் இருதயத்தைத் துறட்டிபோட்டு இழுக்க ஆரம்பித்தது. வைகாசி- ஆவணி-தை-இப்படி மாதக் கணக்குகள் புரண்டு இந்த வருடம் அடுத்த வருடம் என்று ஒத்திபோடப்பட்டு அவனுக்காகப் பார்த்த பெண்கள் எல்லாம் கல்யாணம் செய்துகொண்டு பிள்ளையும் பெற்றுவிட்டார்கள். அவன் கதிதான் இப்படி என்றால், பருவ