உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் மடைந்து ஆறு வருடமாக வீட்டிலிருக்கும் காந்தாவுக்கும் கணவன் வரவில்லை. காந்தா விகாரமில்லை; சுமாரான அழகி கறுப்புதான். கவின் பெறு முகமும் எடுப்பான தோற்றமும் வாய்ந்த திராட்சைக்கொடி அவள். பெண் பிடிக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை ; சீர்வரிசை என்ன செய்வார்கள் ? கல்யாணச் செலவு பெண் செலவு பெண் வீட்டாருடையதுதானே? ?' இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமலேயே காந்தா அரும்புப் பருவம் அழியாமலிருந்தாள். சின்னச்சாமியின் இருதயம் நைந்து சின்னச்சாமி வாழமுடியாதவன். காந்தா அவனால் விட்டது. வாழவைக்கப்பட முடியாதவள். மன அலைகளால் மயங்கிப் போயிருந்த அந்தத் துயர உருவம் திடீரென விரலில் சுட்ட பீடியின் நெருப்பால் உணர்ச்சி பெற்றுத் திடுக்கிட்டது. நிலாவும் மேகத்தில் மறைந்து கொள்ளவே சின்னச்சாமி ஒரு பெரு மூச்சோடு எழுந்தான். கதவைத் தாழிட்டுவிட்டு, விளக்கைக் கொஞ்சமாக அடக்கிவிட்டு, அந்தக் கிழிந்த பாயில் படுத்துக் கொண்டான். அவன் கண்களில் சோகம் படர்ந்திருந்தது. காந்தா உடம்பை நெளித்துக்கொண்டு சோம்பல் முறித்ததிலிருந்து அவளுடைய இருதயத்திலும் ஒரு பெரும் போராட்டம் நடந்திருக்கத்தான் வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது. வாழ்நாளின் வனப்பு மிக்க ஒரு பகு வீணே கழிவ தென்றால்?...கொஞ்சு மொழியும் கோலாகலமும் அனுபவிக்க வேண்டிய பருவத்தில் ஊமையாக முடங்கிக் கிடப்பதென்றால்?... காதல் கீதத்திற்கேற்ற இன்பக் கேளிக்கையாடவேண்டிய நாட்கள், நொண்டியாகி விடுவதென்றால்?...எந்தப் பெண்ணால்தான் தாங்கிக்கொள்ள இயலும் அந்த வேதனையை ! இளமை இந்த இருண்ட உலகில் ஒரு மனித ஜந்துவின் வீடு. அங்கே ரண்டு கிழிந்த பாய்கள். பாயைவிட அதிகமாகக் கிழிந்துபோன இரண் ரண்டு உள்ளங்கள்! தகப்பன்-மகள். தணலில் தவிக்கும் புழு! தாங்கொணா வேதனைப் புயலில் சிக்கிய தளிர் ! காந்தாவின் நீண்ட பெரு மூச்சும், அந்த மூச்சைத்தொடர்ந்து முனகிக்கொண்டே கிளம்பிய சின்னச்சாமியின் அந்தோ...பரிதாபமான நிலைமை. அசைவும்! என்ன அட பாழாய்ப்போன கடவுளே ! அவர்கள் ! பங்களாவா கேட்கிறார்கள்? பட்டு மெத்தையும், பவளக் கட்டி