உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்தமதி 227 'நரம்புகள் விசித்த மெய்யன், நடையினிற் கழுதணிந்தோன், திரங்கியவிரலன், கையன், சிறுமுகன், சினவன், சீறிற் குரங்கினை யனையன், கூனன், குழிந்து புக்கழிந்த கண்ணன் ! “இன்னும் பலவாறாக அவனது விகாரங்களை வர்ணித்து அவன் என்று ராணியிடம் தோழி ஆசை வைப்பது தகாது மீது கூறுகிறாள். 6 று சகல அமிர்தமதியோ அவன் எப்படியிருந்தாலும் கவலையில்லை. அவனை அணைத்து மகிழத்தான் வேண்டும்' என்று பறக்கிறாள். 'கனியிருப்பக் காய் பறிக்கலாமா அம்மா! அழகும் பொருந்திய அரசர் பெருந்தகையின் பெருந்தகையின் மனைவியாகிய நீங்கள், கேவலம் குரங்கைப் போன்ற -ஒரு சாக்கடை மனிதனைக் கொஞ்சிக் குலவ விரும்பலாமா தாயே!' என்றெல்லாம் குணவதி தடுக்கிறாள். ஆனாள் அரசியோ, 'அவன் எப்படியிருந்தால் எனக் கென்ன ; அவன் நல்ல இசைவாணன் அவன் அணைப்பிலேதான் சுகம் இருப்பதாக நான் உணர்கிறேன் என் என்று று கூறியதோடு, அந்தப் பாடல் கற்ற யானைப் பாகனையும் வலிய இழுத்து, அணைத்து மகிழ்ந்தாள். நாளொருமேனியாக அந்த நாய்க் காதல் வளர ஆரம்பித்தது. ஒரு நாள் அரசனே அவர்களது காதல் களியாட்டத்தைத் தூர நின்று பார்த்துவிட்டான். அப்போது என்ன நடந்தது தெரியுமா? அரசன் எந்தக் காட்சியைக் கண்டான் தெரியுமா? வழக்கமாக யானைப்பாகனைச் சந்திக்கும் அமிர்தமதி அன்று சற்றுத் தாமதமாக அவனிடம் வந்து அட்டபங்கன் விட்டாளாம். அதற்காக அந்த யானைப் பாகன் என்னும் பெயருடைய அந்த அவலட்சணம் - அமிர் தமதியின் அழகுக் கருங் கூந்தலைக் கையால் இழுத்து எறிந்து, அவளைக் கீழே தள்ளி, இரு கைகளாலும் நையப் புடைத்து 'ஏன் காலம் தாழ்த்தி வந்தாய்?' என்று கனல் கிளம்பக் கேட்கிறான். 66 ' - - கட்டளையிட்டால், காதம் யோசனை என்ற தூரம் ஓடிக் காரியமாற்றிடும் பணியாளர்களின் தலைவி-மண்டலாதிபதியின் மனைவி- ஒரு அழுகிய உடல் படைத்த யானைப்பாகன், தன்னைத் திட்டி அடிப்பதிலே சுகம் காண்கிறாள். அவள் மலர்ப் பாதங்களை அர்ச்சிக்க ஆயிரம் பேர் காத் திருப்பர் - அவள் அந்தப் பாகனின் கால்களைக் கண்ணில் ஒத்திக் கொண்டு காலந் தாழ்ந்தமைக்கு மன்னிப்புக் கோருகிறாள். இதைக் கண்ட மன்னன் வெகுண்டான். தனக்குத் தடையாக வந்த மன்ன னுக்குத் தந்திரமாக நஞ்சு கலந்து அவனையே தீர்த்துக்கட்டி