உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் விட்டாள், அந்தப் பாகனின் பாட்டிலே சுகம் கண்ட பாதகி. அந்தப் பாதகிக்குப் பெயர் அமிர்தமதி! இதுதான் சுந்தர் யசோதர காவியத்தின் சுருக்கம் ! ` 'நன்றாயிருக்கிறது-சந்தனத்தை மறுத்துச் சாக்கடையிலே சுகம்கண்ட ராணியின் கதை நன்றாயிருக்கிறது! இந்தக் காவியத் திற்கு நீ சுகம் எங்கே?” என்று பெயர் வைத்தது மிகவும் பொருத்தம்.' 66 இப்போது புரிகிறதா -என் எழுத்தைத் திருடியவரும் அந்த அமிர் தமதியும் குணத்தால் ஒருவரே என்பது; கேள் சுந்தரம்! பேச்சை மாற்ற வேறு பக்கம் திரும்பாதே! காவியத்தில் வரும் அமிர்தமதி அரசனை விட்டு யானைப்பாகனைத் தேடுகிறாள் ; அந்த விகாரியுடன் விபச்சாரமும் நடத்துகிறாள். நல்லது கசக்கிறது, நாசம் இனிக்கிறது அவளுக்கு! அவளைப் போலத்தான் என் எழுத்தைத் திருடியவருக்கும் தேன் கசக்கிறது! ஆமாம் சகோதரா! திருட்டுத் தனம் இனிக்கிறதாம். " “ யார் என்று தான் சொல்லேன் !” சொன்னால் நம்பமாட்டாய்! அவ்வளவு நல்லவராய் இருந்தார்-யாரோ அவரை விஷமாக்கி விட்டார்கள். அய்யோ அவர்கள் வாழமாட்டார்கள்! மூளையை உருக்கிச் செய்த கற் பனைகளை உழைக்காமல் எடுத்து விழுங்கிவிட்ட எத்தர்கள் அதிக நாள் வாழமாட்டார்கள்! வியர்வை சொட்டச் சொட்ட, விலா விலே வலி கொட்டக் கொட்ட, விழி மூடாமல் வேலை செய்து நான் உருவாக்கிய தழுவல் இலக்கியத்தைப் பாடுபடாமல் எடுத்து, வாயிலே போட்டுக் கொண்டவர்களுக்கு நல்லதொரு தீர்ப்புக் கிடைக்காமல் போகாது !' "உஸ்! பேசாமலிரு! அலட்டிக்கொள்ளாதே !” "என் சொல்கிறாயா ?" நிலைமையிலே நீ நீ இல்லை - அதனால் அப்படிச் நானும் நீயும் ஒன்றுதானே-வேறு வேறா?' அப்படியானால் இதற்கு என்னதான் வழி ? அதையாவது சொல்! இந்த அக்ரமத்திற்கு அழிவே கிடையாதா?"