உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுனிக்கரும்பு 'சதங்கை கொஞ்சும் பாதம் சதிமிதிக்கும், வானில் மிதக்கும் அவள் தாமரைக்கை மேலும் வதங்கலிலாச்சண்பகத்து நல்லரும்பு. சாடை புரிகின்ற விரல் கண்கவரும் செம்பவளக் காம்பு'. கவிஞர் பாரதிதாசனின் இந்தக்கவிதைக்கு அவள் ஆடற்கலை மூலம் அழகு தந்தபோது அந்தக் கலையரங்கமே மகிழ்ச்சிக் கூத்தாடியது. தாமரைக் கொடியொன்று, முகமலரும் இருமொட்டும் பெற்று, உயிர் பெற்று, ஓவிய உறுப்பும் பெற்றுக் களி நடனம் புரிய வந்ததோ அந்தக் கலையரங்கில் என வியக்காதார் யாருமில்லை. 6 ஒரு ஆணிப் பொன்னாலே மேனி- அழகு ரத்தினத்தால் ஓ பேழை-அது நிறைய ஒளிமுத்து-ஆடற்கலை அவள் சொத்து என அரங்கத்துச் செயலாளர் அருள் நம்பி பாராட்டுரை பொழிந்தபோது கையொலியால் அந்த மண்டபமே அதிர்ந்தது. அமுதா, பெயருக்கேற்ற அழகின் பூரிப்பும் அங்கமெலாம் இளமையின் ஆதிக்கமும் கொண்ட ஆடலரசி. அவள் ஆடாத மேடையில்லை-அவளைத் தேடி ஓடாத நெஞ்சமில்லை! அன்று நூறாவது நடன நிகழ்ச்சி. அதனைத் தனது கலையரங்கத்திலேயே நடத்த வேண்டுமென்று அருள் நம்பி பெருமுயற்சி எடுத்து வெற்றி பெற்றார். அரங்கின் செயலாளர் அவர். கவிதை புனையக் கற்றவர். கலைத்தாயின் சேவையே வாழ்வின் இலக்கு எனக் கொள்கை முழக்கம் செய்து கொண்டிருப்பவர். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளைக் கடந்து, அறுபது என எண்ணத்தக்க அளவுக்கு அனுபவமும் தோற்றமும் கொண்டவர்.