உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுனிக்கரும்பு 245 அவரது நிர்வாகத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிற அந்தக் கலையரங்கத்தில் எத்தனையோ கலை நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் அமுதாவின் நிகழ்ச்சியை அங்கு நடத்த வேண்டுமென்பதில் அவருக்கு எத்துணை ஆர்வம்! எத்துணை துடிப்பு! அவர் நினைத்தது நடந்தது. இலக்கியங்களில் நுழைந்து புலவர்களைக் கெஞ்சிக் காவியங்களைப் புரட்டிக் கடைசியாக ஒரு தமிழ் வளங் கொழிக்கும் பாராட்டுரையைத் தயார் செய்து, அதனை இரண்டு நாள் இரவு பகல் மனப்பாடம் செய்து, கனவிலே கூட அதனை உளறி, இத்தனைக்கும் பிறகு அன்று மேடையில் அமுதாவை வர்ணித்து, மன்றத்தின் பாராட்டுதலைப் பெற்றார். அவர் விரும்பியது மன்றத்தின் பாராட்டு மட்டுமா? " அமுதாவின் ஓர விழிகள் அவரை நோக்கி ஒருமுறை அசைந்தால் போதும்; அதற்காகவே அவர் அத்தனைநாள் கடுந்தவம் இயற்றினார். அருள்நம்பி கலையுலகில் செல்வாக்கு மிக்கவர். தமிழ் மேடைகளில் அவர் தோன்றாதிருப்பதில்லை. விழாக் கூட்டங்களில் அவரது முத்திரை எங்காவது இல்லாமல் இருக்காது. விருந்து கேளிக்கைகளில் அவர்தான் முன்னோடி. இப்படி அனைவரது கவனத்தையும் எப்படியாவது கவர்ந்து நினைவில் தன்னை ஒட்டவைத்துக் கொள்வதில் திறமை மிக்கவர். அவரது சில பிடிக்காத செயல்களைக் கூடக் கிடக்கிறார் பாவம் வயதான மனிதர்' என்று பலர் மன்னித்து விடுவது வாடிக்கை. அவருக்கு என்னவோ ; தன்னை வயதானவர் என்று குறிப் பிடுவதை விட வேறு வசை புராணம் ஒன்று இருப்பதாகவே நினைப்பில்லை. அந்த வார்த்தையைத் தவிர வேறு எதைச் சொன்னாலும் தாங்கிக்கொள்வார். உலகின் இன்பங்களை இளமை உணர்வோடு அனுபவிக்கத்தக்க ஆற்றல் அவரிடம் இருப்பதை யார் மறுத்தாலும் அவருக்கு மனம் புண்ணாகி விடும். அந்த உணர்வோடு அவர் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அப்படிப்பட்டவர் அமுதாவின் அன்புப்பார்வையையே எதிர் நோக்கியதில் அவரைப் பொறுத்தவரையில் தவறில்லையல்லவா? பாராட்டுரையை நிகழ்த்திவிட்டு மல்லிகை மாலையை அமுதாவின் கழுத்தில் அணிவிக்க அவளருகே சென்றார். அதற்குள் அமுதா அவர் இருக்குமிடம் நோக்கி வந்து விட்டாள்.