உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைத்தொட்டி 31 ரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோர். தவமிருப்பவர்களை அவர்கள் தான் போய்க் கெடுப்பார்களோ அல்லது அவர்கள் தங்களைக் கெடுக்க வரட்டும் என்று எதிர்பார்த்து தான் தவம் செய்வார்களோ-இரண்டும் விஷயங்கள் தாம்! இவர்கள் ஆராய்வதற்குரிய ஏதேதோ வந்துவிழுந்து கொண்டிருந்த என் வயிற்றில் நேற்று ஒரு பழைய புராணம் வந்து விழுந்தது. புத்தக உருவில் அது இல்லை. அங்கொன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில ஏடுகள் ! பாதிக்குமேல் செல்லரித்து விட்டிருந்தது! அதில்தான் தவத்தைப் பற்றிய விளக்கங்களையும் கதைகளையும் படித்துத் தெரிந்து கொண்டேன். விசுவாமித்திரர் தவத்தைக் கெடுக்க வந்த மேனகையின் சாகசங்களையும்; அவளது வலையில் முனிவர் விழுந்த பிறகு, அவள் புரிந்த சரசங்களையும்; கானகத்து அருவி யோரங்களில் அவர்கள் நடத்திய காதல் கேளிக்கைகளையும்; கடவுளை நினைக்கும் தவக்கூடம் காமவேள் நடனசாலையாகக் காட்சியளித்ததையும் ; மகேஸ்வரன் வருவதற்கு முன்பு மலர் வருகை தந்து மாமுனிவரை மங்கையின் மடியிலும் காலடியிலும் உருட்டி உருட்டி மகிழ்ந்ததையும்; ஜெபமாலை இருந்த கையில் மேனகையின் துடியிடை சிக்கித் தவித்ததையும்; மறைந்துள்ள முனிவரின் தடித்த உதடுகள் மேனகையின் மெல்லிதழ்த்தேன் பருகிடத் துடித்த விந்தையையும் வெகு சுவை யுடன் நான் படித்துக்கொண்டிருக்கும் மாரன் குப்பை வண்டிக்காரன் வந்து தொலைய வேண்டும். துதானா அந்தக் வந்தவன் மளமளவென்று என் வயிற்றைக் காலிசெய்து அந்தக் கிழிந்த புராணத்தையும் தூக்கி வண்டியிலே போட்டுக் கொண்டு போய்விட்டான். சிலநாட்கள் என் வயிறு உப்பி நான் திக்குமுக்காடிக் கொண்டிருப்பேன்; அப்போதெல்லாம் நாலு நாள் ஐந்துநாள் என்று இந்தப் பக்கம் தலைகாட்டாத நகரசபைக் குப்பை வண்டி என் புராணப் படிப்பில் இப்படி மண்ணைப் போடுமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. யாரோ புது ஆபீசர் இந்தப் பக்கம் வந்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை, ரண்டு மூன்று நாட்களாகத் தெருவைச் சுத்தம் செய்வதில் தீவிரம் காணப்படுகிறது. இதுவும் எத்தனை நாளைக்கு? “வந்தாற் போல மாமியார் பந்தடித்தாள் ; வர வர மாமியார் கழுதைபோல் ஆனாள் என்று பழமொழி சொல்வார்களே ; அதுபோலத்தான் ஆகிவிடும்.