உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைத்தொட்டி 37 எந்தக் குப்பைத்தொட்டி மறைவுக்குப் போனானோ ; தெரிய வில்லை ! நன்றி கெட்டவன். என்னமோ போங்கள்......சத்தற்ற என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சந்தித்தாகிவிட்டது. நான் படித்த கல்யாணப் பத்திரிகைகள் எத்தனை-நான் அருந்திய விருந்துகள் எத்தனை. மங்கல காரிய அழைப்புக்களும்; அமங்கல காரிய அழைப்புக் களும்- எவ்வளவு, எவ்வளவு! காதலன் -கா தலிகள் கிழித்துப் போட்ட திருட்டுத்தனமான கடிதங்கள் எத்தனை-நான் படித்துப் பார்த்து அவர்களை நினைத்துச் சிரித்திருக்கிறேன். பட்டவைகள், ஒளிக்கப்பட்டவைகள் எல்லாமே இருகரங்களால் அன்போடு வரவேற்கப்பட்டிருக்கின் றன. ஒதுக்கப் என்னுடைய எதையும் பொறுத்துக்கொண்டு புன்னகை காட்டுகிற தூய்மை யான துறவிகளைவிட நான் ஒரு படி மேலான பொறுமைசாலி. இந்த நாட்டில் எத்தனையோ மக்கள் வயிறாரச் சோறின்றி வாடுகிறார்கள். என் வயிறோ; காலியாகக் காலியாக நிரம்பிக் கொண்டே யிருக்கிறது. அய்யோ; உங்களோடு பேசிக்கொண் டிருக்கும்போது யாரோ ஒரு பெண் பதுங்கிப் பதுங்கி வருகிறாளே ; சற்று மறைந்து கொள்ளுங்கள் ; ஆம் ; அவளுடைய கையில் ஒரு குழந்தை யிருக்கிறது. பச்சைக் குழந்தை! இப்போது தான் பிறந்திருக்கிறது. அடடா ; அதன் கழுத்தெல்லாம் ரத்தம்! குழந்தை தூங்குகிறதா? இல்லை ; செத்துவிட்டது. கழுத்து முறிக்கப்பட்டிருக்கிறது-சரிதான் அவள் தான் குழந்தையின் தாய்! குழந்தையை என் வயிற்றுக்குள் போடப் போகிறாள் - போட்டேவிட்டாள் ; அவள் ஓடுகிறாள் ; என்னைப் போலீஸ் வரையிலே மாட்டி விட்டு அவள் ஓடுகிறாள்-ஏன் ஓடுகிறாள்? புரிகிறது! புரிகிறது! அவள் கழுத்தில் தாலியைக் காணோம்.