பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

பஸ் ஸ்டாண்டிலிருந்து கொஞ்ச தூரம் சென்றதும் சிற்றாறு வரும். அதன்மேல் கட்டியிருக்கும் பாலத்தின் வழியாகக் கோயில் வாயில்

, வரை சென்று அதன்பின் அருவிக்கரை செல்லலாம். இப்போதெல்லாம் சிற்றாரைக் கடக்காமலேயே நேரேயே அருவிக் கரை செல்ல நல்ல பாதை போட்டிருக்கிறார்கள். நாம் அந்த வழியிலேயே செல்லலாம்.

குற்றாலமலை ஐயாயிரம் அடி உயரமே உள்ள மலை. இம்மலை மூன்று சிகரங்களையுடைய காரணத்தால் திரிகூடமலை என்று வழங்கப்படுகிறது. இச்சிகரங்களில் உயர்ந்தது 5135 அடி உயரமுள்ள பஞ்சந்தாங்கி, இம்மலையில் உள்ள காடுகளுக்குச் ‘செண்பகக்காடு என்று பெயர் உண்டு. மலை முழுவதும் நல்ல மரங்களும் செடிகொடிகளும், வளர்ந்து நிற்கும் மூலிகைகளும் நிறைந்திருக்கின்றன என்பர். இந்த மலையிலிருந்து குதித்துக் குதித்து வருகிறது சிற்றாறு. மிக்க உயரத்தில் இருப்பது தேனருவி. அடுத்தபடியாக, செண்பகதேவி அருவி. அதன்பின்தான் நாம் வந்து சேர்ந்திருக்கும் வட அருவி. இங்குதான் இருநூறு அடி உயரமுள்ள மலையிலிருந்து அருவி குதிக்கிறது. இந்த இருநூறு அடியும் ஒரே வீழ்ச்சியாக இல்லாமல் இடையில் உள்ள பாறைகளில் விழுந்து வருவதால் வேகம் குறைந்து குளிப்பதற்கு ஏற்றவாறு இருக்கிறது. முதலில் இவ்வருவி பொங்குமாங்கடலில் விழுகிறது. அங்கிருந்தே பின்னர் கீழே நீர் வழிகிறது. குளிப்பதற்கு வேண்டிய வசதிகள்

எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன.

அருவியாடும் அனுபவம் ஓர் அற்புத அனுபவம். அது சொல்லும் தரத்தன்று. ஆகவே அருவியாடி திளைத்து, அதன்பின் கோயில் வாயில் வந்து கோயிலுள் நுழையலாம். அருவிக் கரையிலிருந்து அரை பர்லாங்கு தூரம்தான் கோயில் வாயில். கோயில் வாயிலை ஒரு சிறு கோபுரம் அணி செய்கிறது. கோயிலில் நுழைந்தால் விஸ்தாரமான மண்டபம் இருக்கிறது. முதலில் இதனையே திரிகூட மண்டபம் என்பர். இதனைக் கடந்தே நமஸ்கார மண்டபம், மணிமண்டபம் எல்லாம் செல்லவேணும். இதற்கு அடுத்த கருவறையில்தான் திருக்குற்றாலநாதர் லிங்க வடிவில் இருக்கிறார். இவர் ஆதியில் விஷ்ணுவாக இருந்தவர். பின்னர் அகத்தியரால் சிவலிங்கமாக மாற்றப்பட்டார் என்பது புராணக்கதை.

இறைவன் இட்ட கட்டளைப்படி வடநாடிருந்து அகத்தியர் தென்திசைக்கு வருகிறார். அப்போது இக்குற்றாலநாதர் கோயில் பெருமாள் கோயிலாக இருந்திருக்கிறது. அகத்தியர் சிவனடியார்