பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 105

பலாப்பழம், பழத்துக்கு உள்ளிருக்கும் சுளை, சுளைக்குள்ளிருக்கும் கொட்டை எல்லாவற்றையுமே சிவலிங்க வடிவில், இறைவனது வடிவில் கண்டு மகிழ்கிறவர்கள் நாங்கள்” என்றெல்லாம் சொன்னார். மேற்கோளாக,

கிளைகளாய்க் கிளைத்த பல கொப்பு எலாம்

சதுர்வேதம், கிளைகள் ஈன்ற களை எலாம் சிவலிங்கம், கனி எலாம்

சிவலிங்கம், கனிகள் ஈன்ற சுளை எலாம்சிவலிங்கம் வித்து எலாம்

சிவலிங்க சொரூபமாக விளையும் ஒரு குறும்பலாவின் முளைத்து எழுந்த

சிவக் கொழுந்தை வேண்டுவோமே. என்ற பாடலையும் பாடிக் காட்டியிருக்கிறார். ஆம் மரங்களை விரும்புவதோடு நிற்காமல் அவைகளையே சிவலிங்க சொரூபமாக வழிபடவே தெரிந்தவர்கள் தமிழர். அப்படி வழிபாடு இயற்றுவதற்கு உரிய வகையில் இருப்பதுதான் குறும்பலா. அந்தக் குறும்பலா இருக்கும் தலம்தான் குற்றாலம். அந்தத் திருக்குற்றாலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருக்குற்றாலம் எங்கிருக்கிறது என்று சாரல் கால சமயத்தில் நான் சொல்லித் தெரிய வேண்டியவர்கள் அல்ல நீங்கள். தென்காசிக்கு ஒரு டிக்கெட் வாங்கி அங்கு போய் இறங்கி மேற்கு நோக்கி மூன்று மைல் சென்றால் குற்றாலம் போய்ச் சேரலாம். இப்போதுதான் மதுரையிலிருந்தும், திருநெல்வேலியிலிருந்தும், தூத்துக்குடியிலிருந்தும் எக்ஸ்பிரஸ் பஸ்கள் வேறு விடப்படு கின்றனவே. கோடைக்காலத்தில் உதகை, கோடைக்கானல் என்றெல்லாம் செல்லும் சுகவாசிகளைவிட எண்ணிறந்தோர் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் குற்றாலம் நோக்கிச் செல்வார்கள். குற்றாலத்தின் பெருமை எல்லாம் அது ஒரு சுகவாசஸ்தலம் என்பதினால் மட்டும் அல்ல. அங்குள்ள அருவியில் நீராடி மகிழலாம் என்பதினால்தான். உலகில் குற்றாலத்தை விடப் பிரும்மாண்டமான, அழகிய நீர்வீழ்ச்சிகள் எத்தனை எத்தனையோ. என்றாலும், இப்படி உல்லாசமாக அருவிக்குள்ளேயே நுழைந்து நீராடும் வசதியுடையது அதிகம் இல்லை. அப்படிக் குளிப்பதற்கு வசதியாய், உடலுக்கும் உள்ளத்துக்குமே ஒரு மகிழ்ச்சி தருவதாய் அருவி அமைந்திருப்பதி னால்தான் இந்தத் தலத்துக்கே ஒரு சிறப்பு. ஆதலால் நாமும் குற்றாலம் சென்றதும் நேரே அருவிக்கரைக்கே சென்றுவிடுவோம்.