பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

புராணப் பிரசித்தியும், சரித்திரப் பிரசித்தியும் உடைய இக்கோயில் நல்ல இலக்கியப் பிரசித்தியும் உடையது. தலபுராணம் ஒன்று இருக்கிறது. அழகிய சொக்கநாதப் பிள்ளை பாடிய காந்தியம்மைப் பிள்ளைத் தமிழ் படிக்கப் படிக்க இன்பம் தருவது. நெல்லை மும்மணிக்கோவை, நெல்லை வருக்கக் கோவை, நெல்லை அந்தாதி என்ற இலக்கியங்கள் பெற்றது. நெல்லையப்பர் கோயிலில், காந்திமதியம்மை சந்நிதி வழியே நுழைந்தோம். திரும்பும்போது அவள் சந்நிதி சென்று வணங்கித் திரும்பலாம்.

ஏர்கொண்ட நெல்லை நகர் இடம்கொண்டு

வலங்கொண்டு அங்கு இறைஞ்சுவோர்கள் சீர்கொண்ட தன் உருவும் பரன் உருவும்

அருள் செய்து நாளும் வேர்கொண்டு வளர்ந்தோங்கும்

வேய்ஈன்ற முத்தைமிக விரும்பிப்பூணும் வார்கொண்ட களபமுலை வடிவுடைய நாயகிதாள் வணங்கி வாழ்வோம்.

என்ற பாடலைப் பாடிக்கொண்டே வாழலாம்தானே. அப்படியே வாழ்கிற நான், ஒரு திருநெல்வேலிக்காரன் என்பதில் எப்போதும் கர்வம் கொள்கிறவன் ஆயிற்றே.

திருக்குற்றாலம்

சென்னை கிறிஸ்தவ கலாசாலையில் அன்று இருந்த பேராசிரியர்களில் பலர் ஸ்காட்லாந்து தேசத்தவர். அந்தக் கல்லூரியில் ஒரு விழா. விழாவுக்கு கல்லூரியின் பழைய மாணவரான ரசிகமணி டி.கே.சியை அழைத்திருந்தார்கள். விழா நடக்கும்போது டி.கே.சியின் பக்கத்தில் ஒரு பேராசிரியர் உட்கார்ந்திருந்தார். இருவரும் அளவளாவிக் கொண்டிருந்தார்கள். பேராசிரியருக்கு இந்தியர்கள், அதிலும் தமிழர்கள் என்றால் என்னவோ ஏளனம். பேச்சோடு பேச்சாகக் கேட்டார் அவர் டி.கே.சியிடம் “நாங்கள் இயற்கையை மிகவும் மதிப்பவர்கள். மரங்கள் என்றால் எங்களுக்கு மிக மிகப் பிரியம். நீங்கள் அப்படி இல்லைதானே” என்று. அதற்கு டி.கே.சி சொன்ன பதில் இதுதான். “மரங்களிடம் எங்களுக்குப் பிரியம் கிடையாது. அதனிடம் நாங்கள் பக்தியே செலுத்துகிறோம். எங்கள் கோயில் எல்லாம் ஒவ்வொரு மரத்தைச் சுற்றியே எழுந்திருக்கிறது. ஏன், மரத்தையே கடவுளாகப் பாவிக்கும் மனப்பக்குவம் பெற்றவர்கள் நாங்கள். நான் இருக்கும் குற்றாலத்திலே கோயிலுள் இருப்பது ஒரு பலாமரம். மரத்தின் இலை,