பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் s 1 || 1

இளைஞன் என்பதை அறிகிறான். ஆம், என்றும் இளையாய் அழகியாய் என்றெல்லாம் பாடிய கவிஞர் பரம்பரையில் வந்தவனல்லவா? கவிஞன் என்றால்தான் அவனோடு வறுமையும் உடன் பிறந்து வளருமே. வறுமையால் நலிகின்றான். வீட்டிலோ மனைவி மக்கள் எல்லாம் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, வாடுகிறார்கள். இந்த வறுமையையெல்லாம் துடைக்க அந்தக் கலியுக வரதன் முருகனிடம் முறையிடச் சொல்லி அவன் மனைவி வேண்டுகிறாள். தேவர் துயரையெல்லாம் துடைத்தவனுக்கு உங்கள் துயர் துடைப்பதுதானா பிரமாதம்? என்றெல்லாம் கேட்கிறாள். ஆனால் கவிஞனோ மெத்தப் படித்தவன். இந்த முருகனோ சின்னஞ்சிறுபிள்ளைதானே. அன்னை மடிமீதிருந்து இந்த இளவயதில் அன்னை அமுதுட்டினால் தானே உணவருந்தத் தெரியும், அவனோ தாய்க்கு அருமையான பிள்ளை. அதனால் அவளோ அவன் கண்ணுக்கு மையிட்டு, நெற்றிக்குப் பொட்டிட்டு, அடிக்கடி எடுத் தணைத்து முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பாள். இப்படியெல்லாம் தாயோடு விளையாடும் இந்த வயதில், பக்தர்கள் துயரையெல்லாம் அவன் அறிதல் சாத்தியமா? இல்லை, நாமே சென்று சொன்னாலும் அதைத் துடைக்கும் ஆற்றல்தான் இருக்குமா? பிள்ளைக் கொஞ்சம் வளர்ந்து பெரியவனாகட்டும், நல்ல கட்டிளங்காளையாக, வீர புருஷனாக வளர்ந்த பின்னால் அன்றோ அவனால் தன் துயர் துடைத்தல் கூடும் என்றெல்லாம் எண்ணி எண்ணி, முருகனிடம் விண்ணப்பம் செய்வதை ஒத்திப்போட்டுக் கொண்டு வருகிறான் ஒன்றிரண்டு வருஷங்களாக, ஆனால் ஒருநாள் அவனது நண்பர் ஒருவர், திருச்செந்தூர் செல்பவர், அவனையும் உடன் கூட்டிச் செல்கிறார். அங்கே முருகன் கோயில் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தவன்தான் அவன். ஆகவே நண்பருடன் கடற்கரையிலே உள்ள அந்த முருகன் கோயிலுக்கு செல்கிறான்.

அலை வந்து மோதும் அத்திருச் சீரலை வாயிலின் கோயிலைச் சுற்றி வந்து தென் பக்கத்திலுள்ள சண்முக விலாசத்தைக் கடந்து கோயிலுக்குள் நுழைகிறான். அத்தனை நேரமும் கூனிக் குறுகி நடந்த கவிஞன் நிமிர்ந்து நோக்குகிறான். அப்போது அவனுக்கு நேர் எதிரே சண்முகன் காட்சி கொடுக்கிறான். அங்கே செப்புச் சிலை வடிவில் நிற்கும் சண்முகன் பாலனும் அல்ல. பால சந்நியாசியும் அல்ல. ஓராறு முகங்களும், ஈராறு கரங்களும் கொண்ட சண்முக நாதனே வேலேந்திய கையுடன் வீறுடன் நிற்கிறான். ஒரே தங்க மயமான பொன்னாடை புனைந்து ரத்ன சகிதமான அணிகளையும் அணிந்து நிற்கிறான். தலையில் அணிந்திருக்கும் கிரீடம் ஒன்றே