பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

ஒரு லட்சம் ரூபாய் பெறும். கையில் ஏந்தியிருக்கும் வைர வேலோ எளிதாக இரண்டு லட்சம் ரூபாய் பெறும். ஆளுக்கே கொடுக்கலாம் ஐந்து லட்சத்துக்கு ஜாமீன். அத்தனை செளகரியத்துடன் செல்வந்தனாகக் கம்பீரமாக நிற்கிறான். இவ்வளவுதானா? இந்த அழகனுக்கோ ஒன்றுக்கு இரண்டு மனைவியர். அழகனுக்கு ஏற்ற அழகிகளாக, அன்னம் போலவும் மயில் போலவும் விளங்குகிறார்கள். வஞ்சனை இல்லாமல் மனைவியர் இருவருக்கும் அழகான ஆடைகளையும் அளவற்ற ஆபரணாதிகளையும் அணிவித்து, அழகு செய்திருக்கிறான்.

இதையெல்லாம் பார்த்த கவிஞனுக்கோ ஒரே கோபம். இன்னுமா இவன் சின்னப் பிள்ளை? என் குறைகளையெல்லாம் நான் முறையிடாமலேயே அறிந்துகொள்ளும் வயது இல்லையா? இல்லை, ஆற்றல்தான் இல்லையா? ஏன் இவன் நம் துயர் துடைத்திருக்கக் கூடாது? என்றெல்லாம் குமுறுகிறான். குமுறல் எல்லாம் ஒரு பாட்டாகவே வெளிவருகிறது.

முன்னம் நின் அன்னை அமுதுாட்டி

மையிட்டு முத்தமிட்டுக் கன்னமும் கிள்ளிய நாளல்லவே, என்னைக் காத்தளிக்க அன்னமும் மஞ்ஞையும் போல் இரு

பெண்கொண்ட ஆண்பிள்ளை நீ இன்னமும் சின்னவன் தானோ

செந்தூரில் இருப்பவனே என்பதுதான் பாட்டு. “அன்னமும் மஞ்ஞையும் போல் இரு” “பெண் கொண்ட ஆண்பிள்ளை அல்லவோ நீ என்று ஆங்காரத் துடனேயே கேட்கிறான் ஆறுமுகனை. இன்மும் சின்னவன்தானோ என்று முடிக்கும்போது கவிஞனின் ஆத்திரம் அளவுகடந்தே போய் விடுகிறது. இப்படிப் படிக்காகப் புலவன் நேருக்கு நேரே சண்முகனைக் கேட்ட தலம்தான் திருச்செந்தூர் என்னும் திருச்சீரலைவாய். அந்தத் திருச்செந்தூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருச்செந்தூர் திருநெல்வேலி ஜில்லாவில் திருநெல்வேலிக்குக் கிழக்கே முப்பத்தைந்து மைல் தொலைவில் இருக்கிறது. கடற்கரை ஆண்டியான செந்தில் ஆண்டவனைத் தரிசிப்பதற்குமுன் கடலாடிவிட வேண்டும் என்பர். கோயிலின் தென்புறத்தில் நல்ல வசதியாகக் கடலில் இறங்கி ஒரு முழுக்குப்போடலாம். அந்த முழுக்கால் உடலில் ஏறியுள்ள உப்பை, இன்னும் கொஞ்சம் தெற்கே நடந்து அங்குள்ள