பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

“கலை என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு விடை சொல்லி விடுவது அவ்வளவு எளிதல்லதான். அழகு நிறைந்திருப்பதெல்லாம் கலை என்பார் ஒருவர். இல்லை மனிதனது அழகுணர்ச்சியைத் தூண்டி அவனுக்கு ஒரு ஆனந்தத்தைக் கொடுப்பதுதான் கலை என்பார் மற்றொருவர். இந்தக் கூற்றுக்களில் கொஞ்சம் உண்மை இருந்தாலும் அவை கலை என்றால் என்ன என்பதைப் பூர்ணமாக விளக்க உதவவில்லை. மாலைச் சூரியன் மயங்கும் அந்தி தரு சித்திரம், நறுமணத்தை அள்ளி வீசும் வண்ணமலர், அழகே உருவெடுத்த பெண், இன்னும் இவைபோன்ற பலவும் மனிதனது அழகுணர்ச்சியைத் தூண்டத்தான் செய்கின்றன. அவனுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கத்தான் செய்கின்றன. என்றாலும் இவையெல்லாம் இனிய கலைப் பொருளாகிவிடுமா என்ன? இதே பொருள்களைப் பார்க்கின்றார்கள் பலர். அதில் ஒரு சிலர் இவைகளி லிருந்து ஒரு அனுபவத்தைப் பெறுகிறார்கள். அப்படி அவர்கள் அடைந்த அனுபவத்தைப் பிறருக்கு எடுத்துக்காட்ட முயற்சிக் கிறார்கள். அதில் வெகு சிலரே வெற்றி பெறுகிறார்கள். அப்படி வெற்றி பெறுகிறவர்களே கலைஞர்கள். அவர்களது சிருஷ்டியே கலை. தான் கண்ட மாலைக் காட்சியைப் படமாகத் தீட்டி விடுகிறான் ஒருவன். மலரின் வண்ணத்தை மனத்திலிருந்து புனைகிறான் ஒருவன். கட்டழகியின் கவின் உருவைக் கல்லில் செதுக்கி விடுகிறான் ஒருவன். இப்படியே ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் அனுபவத்தையே நீங்களும் நானும் மற்றெல்லோரும் பெற உதவி புரிகிறார்கள். இவர்களே கலைஞர்கள், இவர்களே கவிஞர்கள், இவர்களே சித்ரீகர்கள், இவர்களே சிற்பிகள், இதைத்தான் எரிக் நியூடன் (Eric Newton) என்ற மேலை நாட்டு அறிஞன் சொன்னான். “Art is to be conceived first in the mind of a man, and then made communicable to other man by the skill of a designer working on some medium that could be perceived by the senses of other man, the eye, he ear, the nose and the palate. என்று. இதையே சொன்னான் தமிழன் ஒருவன்,

‘காணுகின்ற காட்சி யிலே

கவிந்து மனம் தான் லயித்து பேணுகின்ற அனுபவத்தைப்

பிற ரெல்லாம் அறியும் வண்ணம் சொல்லாலோ இசையாலோ

சொலற் கரிய ஜதியாலோ கல்லாலோ வணத்தாலோ

காட்டுவதே கலையாகும்’ - என்று.