பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் | 19

கலை என்றால் என்ன என்று தெரிகிறது. நல்ல கலைப் பொருள்களைக் கண்டு ரசிப்பது எப்படி? அது தெரியாதவர்கள் கலைக்கூடத்தின் முன் போய்த் திரும்பினால் என்ன பிரயோஜனம்?

“கலையை அனுபவிக்க முதலில் கண் வேண்டும். ஆம் நல்ல கண் படைத்திருக்க வேண்டும். அந்தக் கண்களை அதற்கென நன்றாகப் பழக்கியும் இருக்கவேண்டும்” என்று மிஸ் அன்னா பெர்ரி என்ற மேல் நாட்டுக் கலா ரசிகை மிக எளிதாகச் சொல்லி விடுகிறார்.

நாம் பார்க்கின்ற கலைப் பொருள்களில், அதாவது சித்திரம், சிற்பம் முதலிய அருங்கலைப் பொருள்களில் உள்ள நயங்களைத் தெரிய மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அவை கலா சிருஷ்டியில் உள்ள இசை (இழுமை) (Rhythm) அந்தப் பொருளில் ஒளிந்து கிடக்கும் உணர்ச்சி (Emotion) இந்த இசையும் உணர்ச்சியும் நிறைந்த அதன் முழுத் தோற்றப்பொலிவு (Form). இசையைக் கவிதையில் எளிதாகக் கண்டுவிடலாம். ஓசை நயம் இருப்பது காரணமாக, ஆனால் சித்திரத்திலும் சிற்பத்திலும் எப்படிக் காண்பது? தண்ணிர் எப்போதும் ஒரே மட்டமாகத்தானே இருக்கும். ஆனால் தண்ணீரைச் சித்திரத்தில் தீட்டிக்காட்ட விரும்புகிறார்கள் என்று கோடிட்டுக் காட்டி விடுவார்கள். குயவன் செய்யும் மண்பாண்டம் சதுரமாக இல்லாமல் ஏன் வளைவுகளும் நெளிவு சுழிவுகளோடும் கூடியிருக்கிறது. எல்லாம் ஒரு இசைவினை உருவாக்கத்தான். வளைவுகளும் அசைவுகளும் இசை நடத்தைக் காட்டிவிடும் லேசாக, இதைப் போலவே, பாவம் உணர்ச்சி என்றெல்லாம் பேசுகிறோம் கவிதையிலே. அதே பாவத்தையும் உணர்ச்சியையும் சித்திரத்திலும் சிற்பத்திலுமே பார்க்கலாம். உவகை, வீரம், சோகம் முதலிய உள்ள உணர்ச்சிகளை உருவாக்கிக்காட்டாத சித்திரமும் சிற்பமும் நல்ல கலைப் பொருள்கள் ஆகா. இந்த உணர்ச்சிகளைக் காட்ட மனித உருவம்தான் வேண்டுமென்பதில்லை. மலரத் தயாராகிக் கொண்டிருக்கும் ரோஜா மொட்டைக் கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் அதனுள் துடித்துக்கொண்டிருக்கும் உணர்ச்சி தெரியும். அந்தத் துடிதுடிப்பை ஒரு படத்திலோ அல்லது சிற்பத்திலோ, காட்டிவிடவும் முடியும். இத்துடன் சித்திரத்தின் அல்லது சிற்ப உருவின் முழுத் தோற்றப் பொலிவையும் தெரிந்துகொள்ள வேண்டும். குயவன் பண்ணுகின்ற மண்பானையை விட சித்திரக் கலாசாலை மாணவர்கள் பண்ணும் அலங்காரச் சட்டிகள் அழகாயிருப்பதேன்? எல்லாம் அதன் உருவ அமைப்பு, அதன் தோற்றப் பொலிவினால்தான். மேலும் சித்திரத்தில் அல்லது சிற்பத்தில் ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும்