பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

உள்ள பொருத்தம், கண்களை உறுத்தும் வேறுபாடுகள் இல்லாதிருத்தல், முதலியவைகளையும் நோக்கும் திறம் படைத்து விட்டால் கலாரசனை கைவந்துவிடும். இப்படியெல்லாம் கலைப் பொருளை அனுபவிக்க கண்களைப் பழக்கிக் கொண்டு கலைக் கூடத்தினுள் நுழைந்தால் அங்கு கலைஞர்கள் தீட்டி வைத்திருக்கும் சித்திரத்தையும் செதுக்கி நிறுத்தியிருக்கும் சிற்பத்தையும் கண்டு களிக்கலாம். சப்பென்ற முறையில் எல்லாம் வெறும் கற்சிலைகள்தான் என்று முடிவு கட்டாமலும் இருக்கலாம்.

இனி கலா மண்டபத்திற்குள் நுழைவோம். கலா மண்டப சிருஷ்டி கர்த்தாக்கள் நல்ல ரசிகர்கள் என்று தெரிகிறது. மண்டபத்திற்கு வாயில் அமைத்திருக்கிறார்களே, அந்த வாயில் ஒன்றே அவர்களது ரசனைக்குச் சான்று பகரும்.

விண் மறைக்கும் கோபுரங்களும் வினை மறைக்கும் கோயில்களும்

நிறைந்த தமிழ்நாட்டில், தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டியார் நடத்தும் கலைப் பொருள் காட்சியில் நிர்மாணிக்கப்படும் கலா மண்டபத்தின் வாயில், அந்தக் கோயிலின் வாயில் போன்றே அமைந்திருக்கிறது. நூற்றுக்கணக்கான மணிகள் வாயிலைத் திறக்கும்போது ஒலிக்கும் ஒலி ஒன்றைக் கேட்பதற்கே அக்கலைக் கோயிலின் முன் தவம் கிடக்கலாம் போல் தோன்றுகிறது. மண்டபத்துக்குள் நுழைந்ததும், உங்களுக்கு முன் நிற்பவர் நடன ராஜன் தான். கலை, சமயம், சாஸ்திரம் எல்லாம் ஒன்று சேரும் இடம் நடன ராஜனது திருஉருவம் என்றார் டாக்டர் ஆனந்த குமாரசாமி. (nataraja is the synesis of Religion, Science and Art) @6 Gg நடன ராஜனை வலம் வந்து கலா மண்டபத்தின் முற்றத்திற்கே போகலாம். அங்கிருந்து இடப்புறமாக ஒரு சுற்றுச் சுற்றி வரலாம். அங்கே இருக்கும் அதி அற்புதமான சித்திரங்களையும், சில உருவங்களையும் பார்க்கலாம்.

முதல் முதலில் உங்கள் கண்ணில் படுகின்ற படம் இளமை (Youth) என்ற மகுடமிட்ட எண்ணெய் வர்ணம் படந்தான் (No. 586). இளமையின் வளத்தையும் துடிப்பையும் சித்ரீகர் ரீ K.C. ராஜேஸ்வரன் காட்டியிருக்கிறார். படத்தைப் பார்த்து,

“மங்கைப் பருவமுன் மேனி முழுவதும் பொங்கி வழியுதடி - பெண்ணே பொங்கி வழியுதடி.”