பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 121

என்று நீங்கள் பாட ஆரம்பித்துவிட்டால் அதிசயமில்லைதான். இந்தப் படத்தின் அடியிலே இரண்டு அபூர்வமான சிற்பங்கள். புத்தர் பெருமானின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் சிற்பம் ஒன்று (No. 568). சாகக் கிடக்கும் மாடு (The Duying Bull) என்னும் சிற்பம் (No. 552) மற்றொன்று. இதில் முன்னையதை உருவாக்கியவர், ரீ சி. கோபால் என்பவர். பிந்தியதை அமைத்தவர் ரீ ஏ.ஜி. சுந்தரமூர்த்தி என்று அறிகிறோம். புத்தர் பெருமானின் வாழ்க்கையில் புத்தர் யசோதரையைப் பிரிந்து உலகத்தையே துறந்து வெளியேறும் நிலை, புத்தர் தியான நிலை, புத்தர் மான், அணில் முதலிய வாயில்லா ஜந்துக்களிடமும் கருணை காட்டும் நிலை, மூன்றையும் உருவாக்கி யிருக்கிறார் சிற்பி. இந்தச் சில உருவங்களில் மான், புத்தர் பெருமானை உணர்ச்சியோடு நோக்குகின்ற அதி அற்புதமான பாவத்தைக் காணத் தவறிவிடாதீர்கள். அதையே பார்த்துக்கொண்டு நின்றும் விடாதீர்கள். ஆனால் சாகக் கிடக்கும் மாடு என்பது சிறப்பான ஒரு சிருஷ்டி அளவில் மிகவும் சிறியதாகவே செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் பரிசு ஒன்றைத் தட்டிக்கொண்டு போய்விடுகிறது. நாட்டிலே தாண்டவமாடும் வறுமை, அதனால் ஏற்படும் கோர மரணங்கள் (மாக்கள் உலகத்தில் மட்டுமல்ல மக்கள் உலகத்திலுமே தான்) இதையெல்லாம் இச்சிற்பம் உருவகப்படுத்துகிறது என்று சொன்னால் அதை மறுக்க முடியாது. செத்துக்கொண்டு வரும் எலும்பையும் தோலையும் இந்தச் சின்னஞ்சிறு சிற்பத்தில் காட்டுகிறார் சிற்பி. இத்துடன் முதல் பரிசு பெற்ற தாமரைப் பெண் (No. 542) என்ற சிற்பத்தையும் உடனே பார்த்து விடுவது நல்லது. இதை உருவாக்கியவர் சென்னை சித்திரக் கலாசாலை ஆசிரியர், சிறந்த நடிகர் ரீ எஸ். தனபால் என்பவர். தாமரை இலை, மொட்டுக் களுக்கிடையே பூத்த ஒரு மலராக நிற்கிறாள் இந்தத் தாமரைப் பெண். அங்கங்களில் எல்லாம் ஒரு குழைவு, ஒரு லளிதம் இருக்கிறது. நடனத்திற்கே தயாராகும் ஒரு நிலையில், முகத்திலே ஒரு உவகையை நிலவ வைத்திருக்கிறார். இதழ் விரியும் தருணத்தில் உள்ள ஒரு தாமரை மொட்டெனவே இவள் காட்சி கொடுக்கிறாள். இந்த அழகான சிலை, சிற்பப் பகுதியில் முதல் பரிசைப் பெற்றிருக்கிறது. பரிசு பெறுவதற்கு இந்தச் சிலைக்கு உள்ள தகுதியை விட, பரிசு அளித்த நீதிபதிகளின் ரசிகத் தன்மை பாராட்டிற்குரியது. இந்தச் சிற்பங்களை நோக்கிய கண்களுடனே தமிழனின் பழங்காலத்து வெண்கலச் சிற்பங்களையும் பார்த்து விடுங்கள். இரண்டு அம்பிகையின் உருவங்கள். அதில் ஒன்றில் அம்பிகையின் இடது கையை வார்த்து வடித்திருக்கிறானே சிற்பி அதையே பார்த்துக்கொண்டு நிற்கலாம் பல மணி நேரம். அந்தக்