பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

கையிலுள்ள லளிதம் வெகு அற்புதம். பிக்ஷாடனர் சிலையும் ஒரு அபூர்வ வேலைப்பாடு. இவற்றையெல்லாம் சேகரித்து வைத்து நமக்கு கல் விருந்தளிக்கும் ரசிக நண்பர்களுக்கு நமது நன்றி.

இனி இப்படியே உங்களை ஒவ்வொரு சித்திரத்தின் முன்னும் சிற்ப உருவின் முன்னும் நிறுத்தி, அதைப் பற்றிப் பேச நான் விரும்ப வில்லை. சில முக்கிய சித்திரங்களைப் பற்றி மட்டும் சொல்லிவிட்டு அவைகளையும் மற்றவைகளையும் கண்டுகளிக்க உங்கள் கண்களையே உபயோகியுங்கள் என்றுதான் சொல்லப் போகிறேன்.

எண்ணெய் வர்ணப் படங்களில் (Oil Painting) ரீ எம்.எஸ். G36,1365mulb 5olquis Gustasivissg)|Ib (Portrait of a Constable No. 519) g பாகேஸ்வர சர்மா தீட்டிய நீராம்பலும் (Water Lily No. 505) பரிசுக்குரியவை என்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் ரீ கே.சி.எஸ். பணிக்கர் தீட்டியிருக்கும் மலபார் மார்க்கெட் பாலம் (No. 515) பார்க்க வேண்டிய ஒரு படம். எண்ணெய் வர்ணப் படங்களில் மேல் நாட்டுப் பாணி கொஞ்சம் அதிகமாகவே தான் காணப்படுகிறது என்றாலும் பரவாயில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

எண்ணெய் வர்ணத்தை விட்டுத் தண்ணி வர்ணத்துக்கு வந்தால் எண்ணிறந்த படங்களைப் பார்ப்பீர்கள். இவைகளை மேல்நாட்டுப் பாணி கீழ் நாட்டுப் பாணி என்ற இரண்டு பகுதிகளாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். மக்கள் (Portraits), மற்ற இசைவுகள் (Compositions) என்றும் பிரித்துப் பரிசுகள் வழங்கியிருக்கிறார்கள். ரீ எச். வி. ராம்கோபால், ரீ பேபி பொன்னம்மாள் இவர்கள் எழுதிய படங்கள் (Nos.2 &4) பரிசு பெற்றவை. ரீ நரசிம்மாச்சாரியர் என்பவர் ஒரு சர்வ சாதாரணமான வாழ்க்கையைப் படம்பிடித்துவிடுகிறார். அவருடைய பகல் தூக்கம் (Nap.No. 5) என்ற சித்திரத்திலே, கையால் தலையணைத்து பாயலில் படுத்துறங்கும் பெண்ணின் பின்புறந்தான் காட்டப்படுகிறது என்றாலும் பெண் தூங்குகிறாள் என்ற உணர்ச்சி நமக்கு வருகிறது. இத்துடன் ரீ ஜி. டி. பால்ராஜ் என்பவர் எழுதியிருக்கும் ஆலமரத்தடி (Under the Banyan No. 500) பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒரு படம். ஆலமரம், அதன் விழுதுகள் மரத்தடியில் இளைப்பாறும் மாடுகள், மாட்டு மந்தை, பழைய மண்டபம் எல்லாம் உயிர் ஓவியங்களாக நமக்குக் காட்சி கொடுக்கின்றன. ஏதோ சில வர்ண வீச்சுகள்தான். ஆனால் அதில் மாடுகள் ஒவ்வொன்றின் நிலையையும் கூட நாம் உணர்ந்து அனுபவிக்கும்படி சித்ரீகர் செய்து முடித்திருக்கிறார். இவர் பாராட்டப்பட வேண்டியவர்தானே?