பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 153

காட்டித் துய்க்கச் செய்யவும் மேற்கொண்ட பெருவழியே தமிழ்.

பாஸ்கரத் தொண்டைமான் கலைப்பித்தர். தமிழறிஞர். தெய்வம் தெளிந்தவர். தெளிந்தாரைப் பேணும் பண்பினர். நல்லனவற்றை யெல்லாம் காணத் துடிப்பவர். கண்டதும் அருமையைப் பாராட்டக் கூசாதவர். அப்படியே குறைகளை எடுத்துரைக்க அஞ் சாதவர். இனிப்புப் so 11:27, 7 ஏப்ரல் 2016 (UTC)~~ பண்டத்திலும் காபியிலும் ‘கம்பன் அடிப்பொடி சா. கணேசன் எவ்வளவு ஆசையோ அவ்வளவு ஆசை அவருக்குத் தலயாத்திரை செய்வதிலே. எண்ணற்ற தலங்களுக்குச் சென்றார், கண்டார், உள்ளம் பறிகொடுத்தார், தமிழ் மக்கள் பலரையும் உள்ளம் பறிகொடுக்கச் செய்தார்.

,

குமரி முதல் வேங்கடம் வரையுள்ள பன்னூறு ஆலயங்களையும் கண்டார், வணங்கினார். சிற்பங்களையெல்லாம் ஆய்ந்தார். அந்த அழகிலே தோய்ந்தார். அவற்றை எல்லாரும் காணாமலே கண்டு அநுபவிக்கச்செய்தார். இமயம் வரை சென்றார். எத்தனையோ படங்கள் எடுத்தார். அவற்றின் குறிப்புக்களை எழுதிக் குவித்தார். அவற்றில் சில வெளிவந்தன, பலப்பல கிடந்துவிட்டன.

கம்பன் அடியார்களிலே சிறந்த ஒருவர் இவர். ஆண்டு தவறாமல் கம்பன் திருநாளில் கலந்து கொள்வதையே பெரும் பேறாகக் கருதி மகிழ்பவர். இவ்வாண்டுதான் வர முடியாமல் போய்விட்டது. இனி எங்கே இவரைக் காண்போம்? இவர் உரையைக் கேட்போம்? கம்பன் திருக்கூட்டத்திலே ஒருவர் இல்லை என்பதை மறக்க முடியாமல் நிலைநாட்டி விட்டுச் சென்றவர் சகோதரர் பாஸ்கரன்.

இவருக்குத் தமிழகத்தில் நிரந்தரமான நினைவுச்சின்னம் ஒன்று உண்டு. அதுதான் இவர் எடுத்த தஞ்சைக் கலைக்கூடம். கலை உள்ளவரை, தமிழ் உள்ளவரை, இவர் புகழைப் பேசிக் கொண்டிருக்கும் அக்கலைக்கூடம்.