பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

திரு. தொண்டைமான் அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன் சில ஆண்டுகள் கோவையில் உதவிக் கலெக்டராக பணியாற்றினார்கள். அது போழ்து கோவையில் சன்மார்க்க சங்கத்தை நிறுவிய திரு. வி. சி. சுப்பையாக் கவுண்டர் அவர்களுக்கும் திரு. தொண்டைமான் அவர்களுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

தொண்டைமான் அவர்கள் எங்கு சென்றாலும் ஒரு இலக்கிய உலகத்தைச் சமைக்கும் இயல்புடையவர்கள். அதேபோல் கோவையிலும் நன்னெறிக் கழகம் என்னும் பெயரில் ஒரு கழகத்தைத் தொடங்கி கவிச் சக்கரவர்த்தி கம்பனுக்கு ஒரு விழா எடுத்தாாகள். இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அன்று ஜில்லா போர்டு தலைவராக இருந்த மந்திரி மன்றாடியார் அவர்களும், இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். திரு. வி.சி. சுப்பையாக் கவுண்டர் அவர்கள் அழுத்தமான சைவப் பற்று உடையவர்கள்.

சேக்கிழார் பெரிய புராணத்தைக் காட்டிலும் சிறந்த நூல் ஒன்று இல்லை என்று கூறும் இயல்புடையவர்கள். சேக்கிழார் இருக்கக் கம்பனுக்கு விழா எடுப்பது என்பது அவர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இவ்விழாவிற்கு நன்கொடை கொடுக்கவும் அவர்களுடைய தாராளமான மனம் முழுமையாக இடம் தரவில்லை. இதனைக் குறிப்பாக உணர்ந்த திரு. தொண்டைமான் அவர்கள் கவுண்டர் அவர்களைப் பார்த்துக் கம்பனுக்கு விழா எடுப்பது போல் சேக்கிழாருக்கும் ஒன்று எடுக்கலாமே, தாங்கள் இருக்க எதைத்தான் செய்ய முடியாது என்று அவர் உள்ளம் களிக்கப் பேசி, வள்ளன்மை நிறைந்தவர்களையே அவ்விழாவின் செலவு முழுவதையும் எற்க ஏற்பாடு செய்தார்கள்.

திரு. கவுண்டர் அவர்கள் இசைந்து அன்று தொடங்கிய சேக்கிழார் விழாவை, பிறர் நன்கொடையின்றி அவர்கள் செலவிலேயே சிறப்பாகப் பல ஆண்டுகள் நடத்தியதுமின்றி, அவர்கள் இயற்கை எய்திய பின்பும் அன்றுபோல் என்றும் அவ்விழா நடக்க வழிவகுத்துச் சென்றார்கள். அவ்விழா ஆண்டுதோறும் நடைபெறும்போது எல்லாம் கோவை நகரத்திற்கு திரு. தொண்ைைமான் அவர்கள் வழங்கிய அழியாத காணிக்கையாகவே அதனை நாம் கருதுகிறோம்.

இன்று அவர்களுக்கு அறுபது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன என்றால், இதை ஒரு இலக்கிய சகாப்தத்தின் நிறைவு