பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என்னும் மத பேதத்தையும், பார்ப்பனர். பார்ப்பனர் அல்லாதார் என்னும் சாதி பேதத்தையும், வெள்ளையன் கறுப்பன் என்னும் இனபேதத்தையும் கடந்து நின்ற இந்தியன், தமிழன் அமரர் பாஸ்கரத் தொண்டைமான்.

பாஸ்கரனுக்குச் சமயப் பற்று உண்டு. ஆனால் சமய வெறி கிடையாது. தமிழ்ப் பற்று உண்டு, ஆனால் தமிழ் வெறி இல்லை. கம்பன் என்னும் தோணியில் ஏறி, வாழ்க்கை என்னும் நெருப்பாற்றை அநாயாசமாக, ஆனந்தமாக நீந்திக் கடந்த கலை ஞானி, பாஸ்கரத் தொண்டைமான்.

- தமிழ்ச்செய்தி வாரமலர் - 11-04-1965

அப்ஸ்ரஸ் நடனம் கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பம்