பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ( பளிங்குக் கண்ணாடி

=கி. இராஜநாராயணன்

அன்பர் பாஸ்கரத் தொண்டைமான் பழக்கத்துக்கு சுவாரஸ்யமான ஆள். பொழுது போகிறதே தெரியாது அவர்கிட்டே உட்கார்ந்திருந்தால்.

சிலபேர், தன் சம்பந்தப்பட்ட விஷயத்தைக் கூட அசுவாரஸ்யமாக ஏனோதானோ என்று வெளியிடுவார்கள். ஆனால் தொண்டமானோ அப்படியில்லை. விஷயங்கள் ஏற்பவர்தம்கோள் (ஏற்பவர்தம் வாங்கிக் கொள்பவர்களின் சக்தியைப் பொறுத்தது.)

தொண்டமான் அவர்களை முதன்முதலில் நான் எங்கே வைத்துச் சந்தித்தது என்று ஞாபகத்திலில்லை. ஆம், ஆம். இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது. சுமார் இருபத்திஐந்து வருஷங்கள் இருக்கலாம், ஒரு தமிழ் வருஷப் பிறப்பு. அதை ஒட்டி திருச்சி வானொலி நிலையத்தினர் ஒரு கவியரங்கம் - எழில் என்னும் பொருள் பற்றி ஏற்பாடு செய்திருந்தார்கள். கு. அழகிரிசாமி, கந்தசாமி செட்டியார், நடராஜன், நான் எல்லோரும் அந்தக் கவியரங்கத்துக்குப் போனோம். அரங்கத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டவன் அழகிரிசாமி ஒருத்தன்தான். நாங்கள் சும்மா போனவர்கள்! தமிழ்நாட்டில் நடந்த, அதுவும் ரேடியோவில் டிகேசி அவர்களின் தலைமையில் நடந்த முதல் கவியரங்கம் அது ரயிலில், இடைவழியில் விருதுநகரில் கொஞ்சநேரம் இறங்கி புத்தகக் கடைப்பக்கம் ஒரு நோட்டம் விடப்போனோம். பெண்கள் ஜவுளிக்கடையைப் பார்க்கிற மாதிரி, எங்களுக்குப் புத்தகக் கடையை பார்க்கிறது ஒரு வியாதி.

அந்தப் புத்தகக் கடையில் வைத்துப் பார்த்ததுதான் முதல் முதலில் அவரை அவரும் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் வெகுநேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு வித்தியாசமாக ஒன்றுமே தெரியவில்லை. யாராவது எங்கள்