பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பண்பில் சிறந்த பாஸ்கரனார்

-s

O

தீப. சிதம்பரநாதன்

சென்ற ஆண்டு திருக்குற்றாலத்தில் நடைபெற்ற சாரல் மகாநாட்டில் ஒரு தனிச் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள், நமது மதிப்பிற்குரிய திரு தொண்டைமான் அவர்கள். இலக்கிய மணமும் கவிதை நயமும், சிற்பக்கலையின் விளக்கமும் பக்தி அனுபவமும் நிறைந்து அமைந்திருந்தது. அன்றையப் பேச்சு, சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது அன்றும். எனக்குக் கொஞ்சம் வியப்புதான். இந்த வயதிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எப்படி இவர்களால் இவ்வளவு வேகமாகவும் உணர்ச்சி வயப்பட்டும் பேச முடிகிறது என்ற கேள்வி மனத்தில் எழுந்தது. பின்பு ஒரு நாள் இது பற்றி அவர்களிடமே கேட்டுவிட்டேன். அதற்கு அவர்கள் எனக்கு ஒருவிதமான அசதியும் ஏற்படவில்லையே என்றார்கள்.

பேசுவதில் மட்டுமல்ல, ஊர் ஊராக அலைந்து திரிவதிலும் அவர்களுக்கு அலுப்போ சோர்வோ அடைவதாகத் தெரியவில்லை. அவர்கள் பிரயாணத் திட்டத்தைக் கேட்டால் மலைப்பாய் இருக்கும். இன்று கோவை பட்டிமண்டபம் தலைமை, நாளை ராமநாதபுரத்தின் ஒரு மூலையில் ஒரு விழாவில் பங்கு கொண்டு விட்டு அதன் பின் இரண்டு தினங்களில் சென்னையில் வேறு ஒரு விழாவுக்குப் போய் விடுவார்கள். சில சமயம் அவர்கள் பிரயாணத் திட்டத்தைச் சொல்லுவார்கள். அதைக் கேட்கவே நமக்கு மூச்சுத் திணறும். அவர்கள் சொல்லவும் திணற மாட்டார்கள். பயணம் செய்யவும் திணறமாட்டார்கள். இதையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது இவர்களுக்கு அறுபது வயது நிரம்பிவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை.

இதையெல்லாம் பணியில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அபார ஊக்கமும், அதனின்று கிடைக்கும் ஆனந்தமுமே இப்படியெல்லாம்