பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 169

அவர்கள் உற்சாகமாய் இருப்பதற்குக் காரணம் என்றாலும் அவர்கள் கைக்கொண்டுள்ள சில சிறந்த, வாழ்க்கை நெறிகளும் பெரிதும் உதவுகின்றன. நான் சிறு பைனாய் இருந்தது முதலே அவர்களுடன் நெருங்கிப் பழகும் பேறு எனக்கு வாய்த்தது. சரளமாய்ப் பேசிப் பழகும் தன்மையும், அன்பு உள்ளமும் அரிய பண்பாடுகளும் என்னை அவர்கள்பால் ஒட்ட வைத்தன. ஒரு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவும், பாசமும், உரிமையும் எங்களிடையே நிலவிவிட்டது. எனது தாத்தா ரசிகமணி டி.கே.சி அவர்கள் மறைவுக்குப் பின்னர் ரீ தொண்டைமான் அவர்களுக்கும் எனக்கும் கடிதப் போக்குவரத்து அதிகப்பட்டது. அவர்கள் ஓய்வு பெற்றுத் திருநெல்வேலி வந்ததன் பின் அடிக்கடிச் சந்தித்துக் கொள்ளவும் உறவாடவும் முடிந்தது. அவர்களுடன் நெருங்கிப் பழக நேர்ந்த காரணத்தால் அவர்களுடைய உற்சாகத்துக்கும் சலியாத உழைப்புக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கும் உள்ள ரகசியம் புலப்பட்டது.

கவலை என்பது அவர்களிடம் அணுக முடியாது. நடந்து போனதை எண்ணி எண்ணி மருகக்கூடாது என்று சொல்வது சுலபம். நடைமுறையில் கைக்கொள்வது தான் சிரமம். தொண்டைமான் அவர்கள் செயலிலும் அதைக் கையாண்டு வெற்றிபெற்று விட்டார்கள். நடந்துபோன துயரங்கள் எல்லாம் உடனுக்குடனே அவர்கள் மனதைவிட்டுப் போய்விடும் போலிருக்கிறது. அவர்கள் பேசும்போது பார்த்தால் பழைய நினைவுகளில் மகிழ்ச்சி தரும் ரசமான விஷயங்களே வரும். சாதாரணமாக நாமெல்லாம் நாம் அடைந்த சங்கடத்தைத் தானே யாரிடமாவது சொல்லித் தீர்க்கப் பார்க்கிறோம்.

அவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்தையும் முன்னதாகவே சிந்தித்துச் சிந்தித்து முடிவுகட்டி அதை நிறைவேற்ற ஒரு திட்டமும் வகுத்துவிடுவார்கள். மனசில் உருவான திட்டம் மிகச் சுளுவாய் செயல்பட்டுவிடும். இலக்கிய விழா, கலை விழா முதலியவைகளை அவர்கள் பொறுப்பில் விட்டுவிட்டால் போதும். விழா ஜாம் ஜாம் என்று நடந்துவிடும். பொறுப்பை அவர்களிடம் கொடுத்தவர்களையே வேலை வாங்கி காரியத்தைச் சாதித்து விடுவார்கள். முப்பது ஆண்டுகள் ரெவின்யு இலாகாவில் பணியாற்றியவர்கள் அல்லவா?

நான் மிகவும் அவர்களிடம் உயர்வாகக் காணும் பண்பு ஞாபகச் சக்தி. அடிக்கடி அதை எண்ணி எண்ணி அதிசயப்படுவேன். கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளில் நடந்த சிறு சிறு நிகழ்ச்சிகள் கூட அவர்கள் நினைவுக்கு வந்துவிடும். அரசாங்க அலுவலில் ஏற்பட்ட