பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

அனுபவமாகட்டும், இலக்கிய மேடைகளில் நடந்தவையாகட்டும், பத்திரிகைக் கட்டுரையாகட்டும் அப்படியே ஒரு சித்திரமாய்த் தோன்றிவிடும் அவர்களுக்கு.

எக்குத்தப்பில் என்னத்தையாவது அவர்களிடம் ஒப்புக்கொண்டு விட்டால் ஆபத்துதான். அதை நடத்தி முடியும்வரை கார்டுக்கு மேல் கார்டு போட்டு ஊசி குத்திவிடுவார்கள். ஆனால், நம் காரியம் ஒன்றை அவர்கள் ஒப்புக்கொண்டு விட்டாலோ அதை அவர்கள் சொந்தக் காரியமாகவே எடுத்துக்கொண்டு விடுவார்கள். நாம் ஒன்றும் அவர்களுக்கு ஊசி குத்த வேண்டாம். ஹாய்யாக ஈச்சேரில் படுத்துக் கொண்டு விடலாம்.

மரியாதை, ஆடம்பரம், பவுஷ இதெல்லாம் அவர்கள் எதிர்பார்ப்பவர்கள் அல்ல. எங்கு சென்றாலும் தம்மைத் தனியாய்க் கவனிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். சாதாரணமாய் எல்லாருடனும் பழகிக் கொள்வார்கள். புதிதாய்ப் பழக்கமான நண்பர்களுடனும் பல நாட்பட்ட சிநேகிதருடனும் உரையாடுவது போல வெகு சரளமாகப் பேசி உறவுகொண்டு விடுவார்கள்.

உடல் நலத்தை மிகவும் அக்கறையாகப் பேணிக் கொள்வார்கள். அதுவே அவர்களை இந்த அறுபத்தியோறு வயதிலும் இளைஞர் போல் ஓடவும் ஆடவும் செய்கிறது என்றால் மிகைஅன்று. ஓய்வு பெற்று வந்த புதிதில் ராமநாதபுரம் ஜில்லாவில் பிள்ளையார்பட்டி என்ற ஊரில் ஒரு ஆறு தினங்கள் மெளன விரதம் மேற்கொண்டார்கள். மேடைப் பேச்சிலும் சரி சாதாரண உரையாடல்களிலும் சரி மிகவும் அதிகமாக ஈடுபாடு உள்ளவர்கள் ஆறு தினங்கள் மெளனமாய் இருப்பது என்பது பெருஞ்சாதனை தான். இது அவர்களிடம் உள்ள கட்டுப்பாட்டை வெளிப்படுத்துகிறது, மெளனம் என்பது வாயினால் பேசாதுமட்டும் இருப்பதால் பயனில்லை. எந்தவிதமான வெளியீடும் இருக்கப்படாது என்று எழுதிக் கொடுப்பது கூட மிகக் குறைவாக வைத்துக் கொண்டார்கள் அந்த விரதத்தின் போது. மெளன விரதத்தின் காரணமாக ரத்த அழுத்தம் குறைந்து உடல் நிலையிலும் ஒரு தெம்பு ஏற்பட்டதாகச் சொன்னார்கள். தினமும் மாலையில் இரண்டு மைல் நடப்பது அவர்கள் வழக்கம். காலையில் 4.30 மணிக்கே எழுந்து விடுவார்கள். கட்டுரைகள் கடிதம் எழுதுவதெல்லாம் அப்போதுதான். தினசரி வாழ்க்கையிலும் பழக்கவழக்கங்களிலும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதிலும் தனியான ஒரு ஒழுங்கும் திட்டமும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக நிம்மதியாகவும்