பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

நமது மாவட்டத்தின் கலெக்டர் ஒரு பெருந் தமிழறிஞரல்லவா, ஏன் சிறந்த கவிஞர் கூட அல்லவா? என்று எண்ணி எண்ணி இன்பமுற்றேன். அவரைப் பற்றி அவரது எழுத்து வன்மையைப் பற்றித் திருப்பத்துரிலுள்ள நண்பர்களிடம்ெல்லாம் நான் அறிந்தவாறு கூறுவதில் எனக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சி இருப்பதாகப்பட்டது. தமிழார்வமுடைய நண்பர்களெல்லாம் “இப்படிப்பட்டவரா நம்முடைய கலெக்டர்” என்று வாய்பிளந்து நின்றனர். அப்போது என்னுள்ளத்தில் இந்தக் கலெக்டரை எப்போது நேரே காணப்போகிறோம் என்ற ஏக்கமே உருவாகியிருந்தது. திருப்பத்துருக்கு வராமலா போய்விடப் போகிறார் நாமும் என்றாவது ஒருநாள் பார்க்காமலா இருக்கப்போகிறோம் என்று எண்ணினேன். -

ஒருநாள் என்னுடைய எண்ணம் நிறைவேறும் காலம் வந்துவிட்டது. நண்பரொருவர் ஓர் அழைப்பிதழை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். கண்ணோட்டமிட்டேன். அன்று மாலை திருப்பத்துர் அஞ்சல் அலுவலகம், மனமகிழ் மன்றத் திறப்பு விழாவில் உயர்திரு. தொ.மு. பாஸ்கரத் தொண்டமான் பேச இருப்பதாக அறிய வந்தது. அப்போது என்னுள்ளத்தே ஏற்பட்ட உணர்ச்சிகளை இப்போது என்னால் எடுத்துச் சொல்ல முடியவில்லை. நான் தேடியலைந்த வாய்ப்பு என்னைத் தேடியல்லவா வந்திருக்கிறது.

மாலை நிகழ்ச்சிக்கு நண்பர் குழாம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு கிளம்பினேன். அப்போது எங்கள் அலுவலகத் தலைவராக இருந்தவரும் நிறைந்த தமிழார்வம் உடையவர். அவரும் விழாவிற்கு வந்திருந்தார். விழா நிகழ்ச்சி ஆரம்பமாக இன்னும் ஐந்து விநாடிகளே இந்தன. அப்போது நாங்களெல்லாம் கலெக்டரது வரவுக்காகக் காத்துக் கிடந்தோம். “கலெக்டர்களெல்லாம் காலதாமதமாகத்தான் வருவார்கள். அவர்களுக்கு எத்தனை எத்தனையோ வேலைகள்” என்று பக்கத்திலிருந்த நண்பர் கூறி முடிப்பதற்குள் வாயிலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து சப் கலெக்டர், தாசில்தார், ரிவினியூ இன்ஸ்பெக்டர் என்று எனக்கும் பழக்கமாகியிருந்த ஒரு கூட்டம் வந்தது. அக்கூட்டத்தின் நடுவில், ஒருவர் (என் உள்ளத்தே விற்றிருக்கும் அவ்வொருவர்தான்) வந்து கொண்டிருந்தார். இதற்கு முன்னரே நான் புகைப்படத்தில் அவரைக் கண்டிருத்தலால் அவர்தான் கலெக்டர் என்று என்னால் உறுதியாகக் கூறமுடிந்தது. “அதோ நடுவில், ஒரு சிறுவனோடு (அவன்தான் அவரது பேரப்பிள்ளை) கையில் கம்பு சகிதம் வருகிறாரே அவர்தான் கலெக்டர்” என்ற நண்பர்களுக்கெல்லாம் காட்டினேன். அவர்கள்