பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

புலப்படும் வண்ணம் எடுத்து விளக்கியபோது, திருந்த வேண்டும் என்ற உணர்வு எங்கள் உள்ளங்களில் எழுந்திருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. சர்க்கார் ஊழியர்களுக்கு, மக்களின் ஒத்துழையாமையையும் அவர் எடுத்துக்காட்டியபோது, குறைகள் எவரிடத்து நேர்ந்தாலும் அஞ்சாது துணிவோடு அதை இடித்து உரைத்து நல்வழிப்படுத்தும் எங்கள் கலெக்டரின் நடுநிலைமை எங்களை வியக்கச் செய்தது.

“இந்தக் கலெக்டர் மிகவும் கண்டிப்பான பேர்வழி ஐயா” என்று என்னிடம் சொன்னார் நண்பரொருவர். எனக்கு அந்த நண்பர் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கண்டிப்பானவர் என்றால் அன்பில்லாதவர், இதயமில்லாதவர் என்பதுதான் எனது அருமை நண்பர் கண்ட பொருள். பிறகு அவருக்குச் சொன்னேன். “கண்டிப்பிற்கும் அன்பிற்கும் தாங்கள் காண்கின்ற இடைவெளி அர்த்தமில்லாதது. பார்க்கப்போனால் கண்டிப்பான பேர்களின் இதயத்திலேயே நிறைந்த அன்பு இருக்கிறது எனலாம். மேலும் உயர்திரு. தொ.மு.பா. அவர்கள், இதயம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான இதயம் படைத்தவர். இத்தனை கண்டிப்பு இருக்கின்ற போதே இன்றைய சர்க்கார் ஊழியர்கள் ஏய்த்துத் திரிகின்றார்களென்றால் கண்டிப்பே இல்லாவிட்டால் கேட்பானேன். ஆகவே கலெக்டர்கள் எப்படி நிர்வாகம் நடத்தவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டே உயர்திரு. தொ.மு.பா அவர்கள்தான் என்று வேண்டுமானாலும் கூறுவேன்” என்று நண்பருக்கு எடுத்து உரைத்தேன்.

மற்றொரு நண்பர் திருப்பத்துர்க் கோட்ட அலுவலகத்திலே பணியாற்றுகிறவர், அன்று கன குஷியாகவே என்னிடம் வந்தார். “ஐயா, உமது ஆபிசில் ஏதோ, கலெக்டர் இன்ஸ்பெக்ஷன்” என்றல்லவா சொன்னீர்? இந்த நேரத்தில் உம்மிடத்தில் மகிழ்ச்சியே தலைகாட்டியிருக்கக் கூடாதே’ என்றேன்.

“அதே மகிழ்ச்சியைக் கலெக்டரே அல்லவா எனக்குக் கொடுத்துவிட்டார். நான் எப்படி மகிழாமல் இருப்பது? என்று சிரித்தார் அந்த நண்பர்.

“என்ன விசேஷம்? என்றேன்.

“நான் வேலை பார்க்கும் nட்டிற்கு (Seat) இன்று கலெக்டர் இன்ஸ்பெக்ஷன் நடந்தது. கலெக்டர் உயர்திரு தொ.மு. பாஸ்கரத்