பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 177

தொண்டைமான் அவர்களே என்னை நேரில் கூப்பிட்டு, மகிழ்ச்சியுடன் முதுகில் தட்டிக் கொடுத்தாரையா” என்று பெருமை பிடிபடாது பேசினார் அவர்.

“ஐயோ! பாவம்! வேலையில் தம்பி இவ்வளவு பின் தங்கியிருக்கிறானே. ஏதோ இவனைத் தட்டிக் கொடுத்தாவது உற்சாகப்படுத்துவோம் என்று எண்ணிதான் தட்டிக் கொடுத்திருப்பாரோ என்னவோ?’ என்ற வேடிக்கையாகச் சொன்னேன் அவரிடம்.

“அப்படியே இருந்தாலும் அது என் பாக்கியந்தானே!” என்று அந்த நண்பர் கூறியபோது ‘ஆயிரம் கலெக்டர் நின் கேழ் ஆவரோ தெரியில் அம்மா’ என்ற நினைவினுடேயே, எங்கள் உளங்களில் எல்லாம் ஆட்சிகொண்டுவிட்ட அந்த ஆட்சித் தலைவரை வணங்கினேன்.

பிறகு கலெக்டர் திருப்பத்துருக்கு வரும்போதெல்லாம் அவர் அறியாமலே அவரது தரிசனம் எனக்குக் கிடைத்தது. அப்படி அந்த முக தரிசனம் கிடைக்கும்போதெல்லாம் எனக்கு உள்ளம் குளிர்வது போன்றதொரு உணர்ச்சி!

1959 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. எனது புத்தாண்டு வணக்கத்தை உயர்திரு தொ.மு.பா அவர்களுக்குச் செலுத்த வேண்டும் என்ற ஆவல் என்னுள்ளத்தே எழுந்தது. தனிப்பட்ட முறையில் சர்க்கார் ஊழியர்கள் இப்படியெல்லாம் ஒரு மேலதிகாரிக்கு எழுதக்கூடாதே என்ற எண்ணம் வந்தவுடன் என் ஆவல் ஆட்டம் கண்டுவிட்டது. சற்று சிந்தித்தேன். எப்படியும் அனுப்பிவிட வேண்டும் என்ற விழைவு என்னை உந்திற்று.

ஒரு பெருங் கவிஞருக்கு, ஏதோ கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தின் துவக்கத்தில் இருக்கும் ஒரு இளங்கவிஞன் புத்தாண்டு வணக்கத்தைச் சமர்ப்பிப்பது போல் என்னை மாற்றிக் கொண்டுவிட்டேன். சிந்தனா என்ற புனைபெயரையும் ஏற்றுக் கொண்டேன். கவிதை எழுதி அனுப்பிவிட்டேன். இதையெழுதி நான் அஞ்சலில் சேர்த்தபோது இதற்கு மறு கடிதம் வரும் என்று நான் எண்ணவே இல்லை.

பெருங்கவிஞரிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தது. என்னை யார் என்று அவர் அறிந்திருக்க நியாயமில்லை. அறிய வேண்டிய அவசியமும் கூட இல்லைதான். அழகிய அவரது தமிழ்க் கையெழுத்து மீண்டும் என் கண்களுக்கு விருந்தாயிற்று. பொங்கலன்று திருச்சி