பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 181

விருந்தெல்லாம் முடிந்து திரும்புகின்ற வேளையில் தமிழ்நாட்டின் சிறந்ததோர் கலைக் கூடமாக விளங்கும் ஜலகண்டேஸ்வரர் கோயில் வாயிலிலே, தமிழகத்துக் கலை வேந்தர், உயர்திரு. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் கூப்பிய கரத்தினராய் நின்று அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தார். எவ்வளவுதான் சமாதானம் செய்துகொள்ள முயன்றாலும், எங்களை விட்டுப் பிரிகிறார் என்றால் உள்ளம் கேட்கிறதா? உள்ளத்தின் உணர்வுகளையெல்லாம் இறுக்கிப் பிடித்தவாறு வெளியே வந்தேன். ஆனால் அன்று அவர் கூப்பிய கரத்தோடே நின்ற காட்சி என் நெஞ்சை விட்டு இன்னும் நீங்கவே இல்லை.

உலகத்தின் இருளை நீக்கக் கீழ்த்திசையில் பாஸ்கரன் புறப்படுவது போல, எங்கள் மாவட்டத்தின் குறைபாடுகளையெல்லாம் நீக்க வந்தவர் உயர்திரு தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள். அவர் வரவால் வடஆர்க்காடு மாவட்டத்தில் தமிழ் வளர்ந்தது. கலை சிறந்தது. அன்பு மணந்தது. அறம் ஓங்கியது. பக்தி நல்லதோர் உயிர்ப்பைப் பெற்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிர்வாகத்தில் மலிந்து கிடந்த ஊழல்கள் ஒடுங்கி விட்டன என்று கூற வேண்டும்.

அஞ்ஞான இருளை நீக்க இன்று உயர்திரு. தொ.மு.பா. அவர்கள் செய்து வருகின்ற சேவையை அனைவரும் அறிந்து மகிழ்கிறார்கள். தமிழுலகில் அவரை அறியாதார் அறியாதாரே என்னுமளவிற்கு அவர் புகழ் வளர்ந்துவிட்டது. இனி, இந்த பாஸ்கரத் தரிசனத்தால் உலகமே விழிப்படைந்தாலும் அதில் வியத்தற்கு ஒன்றுமில்லைதான்! Q

திருவடி யும் தண்டையும்

சிலம்பும் சிலம்பு ஊடுருவப் பொருவடி வேலுங் கடம்பும்

தடம்புயம் ஆறிரண்டும் மருவடி வான வதனங்கள்

ஆறும் மலர்க்கண்களும் குருவடி வாய்வந்து என் உள்ளம் குளிரக் குதி கொண்டவே.