பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

உலக மகா கவிஞர்களுள் ஒருவர் மில்டன். அவரது நூலை ஆங்கிலத்திலேயே பயின்று உணர்வது கடினம் என்பார்கள். அதனை அருந்தமிழாக்கியவர் திரு. வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார வர்கள். அவருடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டவர்கள் தொண்டைமானவர்கள். மில்டன் இறைவன் எப்படி உலகத்தைப் படைத்தான் என்பதைச் சுவர்க்க நீக்கத்தில் (புத்தகம் 6) அழகாகச் சொல்கின்றார். அதே பகுதியை நம் தொண்டைமானவர்கள் அனாயசமாகச் சொல்லிவிடுகின்றார்கள். அப்பகுதியைப் பார்ப்போம்!

“ஆதியிலே பரமபிதா

ஆக்கினார் உலகமதை சோதி அங்கே தோன்ற எனச்

சொன்னார் ஒரு வார்த்தை! வானம் தனைப் படைத்து வானிற்கும் அப்பாலே வானுலகை யும்படைத்து,

வானில் சுடர் படைத்தான். நிலத்தோடு நீர் படைத்து,

நித்திலம் போல் பயிர்படைத்து, வளம் நிறைத்து வைத்தார் வண்ணத் தவிசிருந்து. நீரிலே நீந்துகின்ற

மீனினத்தைப் படைத்ததன்பின் பாளிலே பறப்பனவும்

நடப்பனவும் தான் படைத்தார் இத்தனையும் படைத்தபின் தான் எண்ணமிட்டார் இறைவனுமே அத்தனையும் அனுபவிக்க

ஆள்வேண்டு மென நினைந்தார். மண்ணிலொரு பிடியெடுத்து

மனிதனையே உருவாக்கி அன்ன வன்றன் விலாஎலும்பில்

ஆரணங்கைச் சமைத்திட்டார். ஆணோடு பெண் இணைந்து

அன்போடு ஒன்றுவதில் காணும் உயிர்களெல்லாம்

புதிதாய்ப் பிறந்தனவே!"