பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 189

அணுவிற்குள் உள்ளிருக்கும்

அமர நிலையோடு அணுவிற்கு வெளியினிலும்

அமைந்தே இயங்குகின்றான் மண்டுபெருங் காதலுடன்

மக்கள் இனம் உய்ய என்று கண்ட முன்னோர் தாம்

எம்மான் அருள்விழைந்து நன்றாய்ச் சமைத்தார்கள்

நடராஜன் திருவுருவை.” தொண்டைமானவர்கள் எப்போதும் கவிதை உலகிலே வாழ்பவர்கள். கவிதை எப்படி உருவாகிறது என்பதைப் பற்றி ஆராய்கிறார். சொல்லோடு சொல் இணைந்தால் கவிதையாகி விடுமென்று சிலர் எண்ணுகிறார்கள். ஆகையினால்தான் செங்கல் போல் அடுக்கப்பட்ட சொல் வரிசைகளெல்லாம் கவிதையாகிவிட்டன. காவியங்களாகிவிட்டன.

நம் தொண்டைமானவர்கள் கவிதை உருவாகும் விதத்தை அழகுறச் சொல்கின்றார்.

கருத்தோடு சொல் முயங்கிக் கனவுலகை உருவாக்கித் தருக்கோடு விண்ணினையும்

தாவிப் பிடித் தணைத்து வளமான கற்பனையை

வாகாய் நிறைத்தந்த உள்ளத்தில் பிறக்கின்ற

உயர்க்கவிதைப் படைப்பலவோ? மேலை நாட்டார் எப்படிக் கவிதை உருவாகிறது என்பதைச் சொல்லும் பொழுது அங்கே திணறலையும் முணகலையும் கைவிரிப்பையுமே காண்கிறோம்.

நம் தொண்டைமானவர்கள் கவிதை உருவாவதை மிக லாகவமாகக் காட்டுகின்றார். ஒரு புதுப்பொருள் தோன்ற வேண்டுமென்றால் ஒரு பொருளோடு மற்றொரு பொருள் பொருந்தி முயங்க வேண்டும். இது விஞ்ஞான நியதி கருத்தோடு சொல் முயங்குகிறது. அங்கே கனவுலகம் தோன்றுகின்றது. அக்கனவுலகிலே இருந்து கொண்டு விண்ணைத் தாவிப்