பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

பிடித்தணைக்க வேண்டும். பிறகு உள்ளத்தில் வளமான கற்பனை நிறைக்க வேண்டும். அப்பொழுது உள்ளத்தில் ஊற்றெடுத்துப் பிறக்கின்றதே, அதுதான் கவிதை என்கிறார். அந்தக் கவிை ங்ஙனம் இருக்க வேண்டும்?நீண்டநாளாகப் பெரிய ஆய் கள் நிகம்i வந்துள்ளன. படித்த பெரும் பெரும் புலவர்களுக்கே எட்டாதபடி இருப்பதுதான் கவிதை! அகராதி என்னும் விண்ணிற்கோ ஆய்வுரை என்கின்ற விமானத்திற்கோ கட்டுப்படாமல் உயர இருப்பதுதான் கவிதை! சுருங்கச் சொன்னால் பாடிய கவிஞன் கூடப் பின்னால், உணரவொணாதபடி இருப்பதுதான் கவிதைக்குத் தனியிலக்கணம்! என்றெல்லாம் கருதிவிட்டனர். நான் பாடிய கவிதைக்கு நீ உரை சொன்னால்தான் பெரும்புலவன் என்று சொல்லிக் கும்மாளம் போட்ட கவிஞர்களும் உண்டு. சில கவிஞர்களின் பாடல்கள் இன்னும் கன்னியாகவே இருக்கின்றன! அஃது இன்னும் தன் கருத்தைப் பிறருக்கு வழங்க மறுத்துக் கொண்டேயிருக்கின்றது. இஃது ஆச்சரியமில்லையா? இதை உணர்ந்த நம் கலைமணியவர்கள் கவிதைக்கு இலக்கணம் வகுக்கிறார்கள்.

“கவி யென்றால் முடிச்சு பல

கட்டாயம் வேண்டுமென்று கவிக்கி லக்கணம் வகுத்துக்

காலமெல் லாம் கழித்தோம் யமகத் தொடு திரிபு

யாண்டுளது எனத் தேடிச் சமர் புரிந்து அத்தோடு

சாதுரிய வெற்றி பெற்று இருப்புக் கடலையினை

இனிய சுவை உடையதென விருப்போடு தானருந்தி

விண்ணாளம் பேசி வந்தோம் உண்மைக் கவிதை யினை உணராமல் ஏமாந்தோம் ஒண்மை அறிவில்லா

ஊமையராய் வாழ்ந்தலுத்தோம்!” ரசிகமணி டி.கே.சியவர்கள் அகஸ்தியராயிருந்து கவிதைக்கு வடித்த இலக்கணம்., நம் தொண்டையானவர்களால் அழகிய உருவம் பெற்றது! இக்கவிதையிலக்கணம் உணராதவர்க்கு நல்ல கவிதையினைச் சுவைக்க முடியாது.