பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 191

பழைய பண்பாட்டில் ஊறிய மரபில் வந்த நம் தொண்டைமானவர்கள் இலக்கியம் உணரும் கூரிய செவியினைப் பெற்றிருந்தார்கள். பழைய சங்க இலக்கியம் முதல் பாரதியிலக்கியம் வரை எல்லாவற்றையும் நன்கு சுவைத்தவர். சங்கப்பாடல்களின் தூய்மையையும் வள்ளுவனின் கவிதையின்பத்தையும் நன்குணர்ந்து அனுபவித்தார்கள். அவ்வனுபவம் அவருக்கு நிறைவைத் தரவில்லை. அவர் உள்ளத்தில் ஓர் ஏக்கம் இருந்தது. தொண்டைமானவர்கள் ஒளவைக் கிழவியின் பாக்களில் விளைந்த சுகத்தையும் நாவேந்தர் புனைந்த முத்தொள்ளாயிர (முத்தொள்ளாயிர ஆசிரியருக்கு இவர் தந்த பெயர் நாவேந்தர்) நயத்தையும் நந்திக்கலம்பகத்தின் கற்பனையையும் தரமறிந்து சுவைத்தார். ஆனாலும் அவருடைய கலைப்பறவை சிறகடித்துப் பறப்பதற்கேற்ற வானம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் கம்பக் கடலைக் காண்கிறார். அதனுடைய பரப்பிலும் விரிவிலும் ஆழத்திலும் ஈடுபாடு கொள்கிறார்.

“எவ்வளவு பரந்த கடல்

எவ்வளவு விரிந்த நிலை! இக்கடலின் எல்லையினை

எப்படி நாம் கண்டுகொள? அகலமதை அளந்தாலும் ஆழமதை அறிய சகலகலா வல்லவனும்

சாதித்தல் கூடிடுமோ? அலைமேல் அலைவந்து

அழகான முத்தையள்ளி மலையாக் குவிப்பது போல்

மன்னன் கவிசொல்வான் விண்ணில் ஒளிர்கின்ற

மீனினத்தைப் போலெல்லாம் கண்ணில் இனியபல

காட்சிகளைத் தந்திடுவான் கற்பனையாம் தேரேறி ககனமதிற் பறந்து அற்புதமாம் கவி உலகில்

அமுதொழுகும் இசைபரப்பி நீலநெடு வான்முகட்டை

நித்தம் தழுவிவரும்