பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 பொதிகைப் புதல்வரின் புத்தக வெளியீடு


ராஜரங்கன்

கலைமணி தொ.மு. பாஸ்கரத் தொண்டமான் நினைவு அறக்கட்டளையின் சார்பில் ஏப்ரல் ஐந்தாம் தேதி அமரர் தொ.மு.பா. எழுதிய ஆறு அரிய நூல்கள் வெளியிடப்பட்டன. அனைத்துமே ஆன்மிக, கலைக் கருவூலங்கள், பிள்ளையார்பட்டிப் பிள்ளையார், ஆறுமுகமான பொருள், வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்தாம் பாகம்), ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும், மதுரை மீனாட்சி, இந்தியக் கலைச் செல்வம் ஆகிய இவை கலைஞன் பதிப்பகத்துக்குக் கைவந்த, அழகிய அச்சுத்திறன் மிளிர, வண்ணப் பதிப்புகளாக வந்து வாசகர்களை மகிழ்வித்திருக்கின்றன.

அமரர் தொண்டமான் வாழ்ந்தது அறுபத்தோரு ஆண்டுகள்தான். 1965 இல் அவர் மறைவதற்கு முன் ஆற்றிய சாதனைப் பட்டியல் பிரமிப்பாக இருக்கிறது. தமிழகம் முழுவதும், பின்னர் இந்தியா முழுவதும் உள்ள கோவில்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களையும் ஸ்தலச் சிறப்புக்களையும், அவை பெற்ற பாடல்களையும் ஆராய்ந்து, அவர் “வேங்கடம் முதல் குமரி வரை’ என்ற தலைப்பிலும் பின்னர் “வேங்கடத்துக்கு அப்பால்” என்ற தலைப்பிலும் எழுதிய தொடர் கட்டுரைகள் கல்கி பத்திரிகையில் வெளியானபோது இவை இறையன்பர்களுக்கும், கலை அன்பர்களுக்கும் விருந்தாக அமைந்தன. சிற்பக்கலையில் அவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பு ஊரூராகத் தேடி, எங்கெங்கோ புதைந்து, கவனிக்கப்படாமல கிடந்த சிலைகளைக் கொணர்ந்து தஞ்சைக் கலைக்கூடத்தை உருவாக்க வைத்தது. ஐ.ஏ.எஸ். பதவியில் அவர் காட்டிய கடுமையான உழைப்பையும் மிஞ்சிய உழைப்பு இது. பிரதிபலன் எதிர்பாராது கீதை வழியைப் பின்பற்றியதாலோ என்னவோ, இன்றுகூட தஞ்சைக் கலைக்கூடத்தில் அவருடைய பெயரோ, புகைப்படமோ காணப்படவில்லை. பிரம்மாண்டமான