பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

> * 2 சமூகத் தலைவர் தொண்டைமான்

O

என்.எஸ்.வி. தொண்டைமான்

தொண்டைமான் என்ற சொல்லுக்கு அரசன் என்று பொருள் சொல்வார்கள். தோட்டி முதல் தொண்டைமான் வரை என்ற தொடரே அதை விளக்கப் போதியதாகும். தொண்டை நாட்டிலே இருந்து அரசாண்ட பல்லவ மன்னர்கள் தொண்டைமான் என்ற பட்டத்தைத் தாங்கியிருக்கிறார்கள். பின்னர் புதுக்கோட்டையிலிருந்து அரசாண்ட மன்னர் பரம்பரையும் தொண்டைமான்களாகவே இருந்திருக்கின்றனர். அந்த மன்னர் பரம்பரையைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் தென் பாண்டிநாட்டுக்குச் rேத்ராடனமாக வந்து இங்கே தங்கி மடாலயங்கள் எல்லாம் நிறுவினார்கள் என்று ஒரு தாமிர சாசனம் கூறுகிறது.

இந்தச் சமூக மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்று பாடுபட்டவர்களில் முதன்மையாக நினைக்கப்பட்ட வேண்டியவர் தென்காசி குருமூர்த்தி தொண்டைமான்தான். அவர்தான் புதுக்கோட்டை சென்று அங்குள்ளவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, புதுக்கோட்டைக்கும் திருநெல்வேலிக்கும் இணைப்பை ஏற்படுத்தினார். அவருக்குப் பின், பாளையங்கோட்டை மனகாவலப் பெருமாள் தொண்டைமான், வீரவநல்லூர் பிச்சைக்காரத் தொண்டைமான், திருநெல்வேலி தொண்டைமான், முத்தையா ஆகியோர் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு, சங்கம் நிறுவியும் மாநாடுகள் நடத்தியும் உழைத்தார்கள். தொண்டைமான் முத்தையா கள்வர் கோமான் என்று ஒரு பத்திரிகையும் நடத்த வந்தார்.

தஞ்சை ஜில்லாவில் மன்னார்குடியை அடுத்து குறிச்சியில் 1929 ஆம் ஆண்டு ஒரு கள்ளர் மாநாடு நடந்தது. சுவாமிநாத மழவராயர், தொண்டைமான் முத்தையா போன்றோர் இணைந்து நடத்திய மாநாடு அது. நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் செய்து வைத்த அறிமுகத்தால், பாஸ்கரத் தொண்டைமானும், அவரது சகாக்களும்