பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

அந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். அப்போது பூண்டி வீரையா வாண்டையாரின் அறிமுகம் கிடைத்தது. தஞ்சைக்கும் திருநெல்வேலிக்கும், பெண் கொடுத்து, பெண் எடுக்கும் பழக்கமும் ஏற்பட்டது. திருநெல்வேலி கள்ளர் குல மக்களின் தலைவராய் இருந்து, பாஸ்கரத் தொண்டைமான் ஆற்றிய பணிகள் பலபல.

தொண்டைமான் சமுதாயத்துக்காகச் செய்த சேவைகளில் எல்லாம் சிறந்தது, குற்றாலத்து மடத்தைத் தங்களது என்று உரிமை கொண்டாடிய குற்றாலநாதரது தேவஸ்தானத்தாரோடு போராடி, நீதிமன்றம் வரை போய் வாதாடி, மடத்தை மக்களுக்கு மீட்டுத் தந்ததே 1944 க்கு முன்னர் குற்றாலத்து மடம் கழுதைகள் அடைகிற மண்டபமாகத்தான் இருந்தது. கவனிப்பார் இல்லாமையால் பாபநாசம் மடம் எல்லாம் பிறர் கைவசம் போய்விட்டது. திருச்செந்தூர் மடமும் குற்றால மடமும் மட்டும் காப்பாற்றப்பட்டன. குற்றாலம் மடத்தை ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் ரீரமணாத்தாரணம் செய்து திறப்பு விழாவும் நடத்தி வைத்தார்.

அந்தத் திறப்பு விழாவுக்கு அரசர் பெருமானின் மைத்துனரான, கல்லாக்கோட்டை ஜமீன்தாரார் விஆர்பிஆர் சிங்கப் புலியாரை வரவழைத்து, ரசிகமணி டிகேசி அவர்கள் தலைமையில் ஒரு பெரிய திறப்பு விழாவும் நடத்தி வைத்தார். சூட் தாக்கல் செய்தார்கள். கேசை, முன்சீப் கோர்ட்டிலும், சப் கோர்ட்டிலும், பின்னர் ஹைகோர்ட்டிலும் வாதாடியவர்கள் தொ.மு.பா. அவர்களே. அத்தனைக்கும் தோன்றாத்துணையாயிருந்து உதவியதோடு தீர்வை செலுத்தப்படாமல் மடம் ஏலத்துக்கு வரும் நிலையில் இருந்தபோது, தொமுபா அவர்கள்தான் செக் அனுப்பி, மடம் ஏலம் போகாமல் காப்பாற்றினார்கள். மடத்திலிருந்து பத்து சென்ட் நிலத்தில் கூத்தர் குடில் என்ற குடிலைக் கட்டி, அதில் வரும் வாடகை, வருமானத்தில் இருந்து வருஷா வருஷம் தீர்வையும் அவர்களே கட்டி வந்த தன் காரணமாக, மடம், தேவஸ்தானத்துக்கோ அல்லது மற்றவர்களுக்கோ போய்விடாமல் அரண் செய்து காப்பாற்றினார். அவர்கள் செய்த சமுதாய சேவைகளில் எல்லாம் தலையாயது இதுதான். இத்தனைக்கும் அவர்களுக்கு உதவியாக இருந்து ஓடியாடி வேலை செய்த பாக்கியம் எனக்குக் கிடைத்ததை எண்ணி

பெருமைப்படுகிறேன்.